வாழ்க்கையில் மன நிம்மதியை தரும் 8 சக்தி வாய்ந்த மந்திரங்கள்

By Sakthi Raj Jul 29, 2026 02:00 PM GMT
Report

நம்முடைய வாழ்க்கை என்பது நிலையற்றது. நம்முடைய வாழ்க்கை என்பது விடை தெரியாத ஒரு பயணம். அந்த வகையில், இந்த பயணத்தில் நம்மை நாம் உயர்த்திக்கொண்டு இறைவனை சரண் அடைவதில் மட்டுமே குறிக்கோளாக இருக்க வேண்டுமே தவிர தேவை இல்லாமல் குழப்பிக் கொள்வதில் எந்த ஒரு பயனும் இல்லை. அந்த வகையில், நம்முடைய வாழ்க்கைக்கு நிம்மதி தரக்கூடிய முக்கியமான எட்டு மந்திரங்களை பற்றி பார்ப்போம்.

1. நம்முடைய வாழ்க்கையில் ஒருவர் நம்மை கோபப்படுத்துகிறார் என்றால் அந்த இடத்தில் எவர் ஒருவரால் மௌனம் காக்க முடிகிறதோ அவர் நிச்சயம் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய சாதனை படைக்க வேண்டும் என்று நினைத்தாலும் அதை அவர் அடைந்து விடுவார்.

2026: இன்று ஆடி பெளர்ணமி அன்று மறந்தும் செய்யக்கூடாத 7 தவறுகள்..

2026: இன்று ஆடி பெளர்ணமி அன்று மறந்தும் செய்யக்கூடாத 7 தவறுகள்..

2. ஒருவர் உங்களை விலக்கி வைக்கும் பொழுது அந்த இடத்தில் இருந்து நீங்கள் சற்று விலகியே இருங்கள்.

3. ஒருவர் உங்களை பெருமைப்படுத்தி பேசுகிறார் என்றால் அந்த இடத்தில் நீங்கள் துள்ளி குதிக்காமல் அமைதி காப்பது அவசியம்.

4. அதேபோல் ஒருவர் உங்களை உதாசீனம் செய்கிறார் என்றால் அந்த இடத்தில் உடைந்து விடாமல் மன தைரியத்தோடு இருப்பது அவசியம்.

வாழ்க்கையில் மன நிம்மதியை தரும் 8 சக்தி வாய்ந்த மந்திரங்கள் | 8 Mantras We Should Follow For Peacefull Life

12 ராசிகளும் ஆடிப் பௌர்ணமி அன்று செய்ய வேண்டிய முக்கியமான பரிகாரம்

12 ராசிகளும் ஆடிப் பௌர்ணமி அன்று செய்ய வேண்டிய முக்கியமான பரிகாரம்

5. குறிப்பாக யாராவது உங்களை அவமானம் செய்கிறார்கள் என்றால் அந்த இடத்தில் தவறியும் அழுது விடாதீர்கள்.

6. தோல்வி என்பது நிரந்தரமில்லை. வாழ்க்கையே நிரந்தரம் இல்லை என்கின்ற பொழுது தோல்வியை கண்டு நாம் எப்பொழுதும் பயம் கொள்ளத் தேவையில்லை.

7. வாழும் ஒவ்வொரு நிமிடமும் நமக்கான வாய்ப்புகளும் வெற்றியை உருவாக்கக்கூடிய பாதையும் ஆகும். வெற்றி பெற்ற பிறகு முற்றிலும் பணிவு அவசியம். அது நாம் வெற்றி பெற்ற பிறகும் ஜெயிக்க கூடிய அடுத்த வெற்றியாகும்.

8. யாராவது உங்களை காயப்படுத்தினால் கட்டாயமாக அதை நீங்கள் கண்டுகொள்ளாமல் தவிர்த்து விடுங்கள். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US