யாராலும் ஏமாற்ற முடியாத மனநிலை பெற கிருஷ்ண பகவான் சொல்லும் 8 விதிகள்
இந்த உலகத்தில் எதுவும் நிரந்தரமல்ல. ஆனால் மனிதர்கள் அதை புரிந்து கொள்ளாமல் எல்லா விஷயங்கள் மீதும் பற்று வைத்து வாழ்ந்து வருகிறார்கள். இதனால் அவர்களுக்கு நிறைய சிக்கல்கள் சந்திக்க வேண்டிய நிலை வருகிறது.
சில நேரங்களில் நம்பியவர்களாலே ஏமாற்றக்கூடிய நிலை உண்டாகிறது. அந்த வகையில் எவராலும் எந்த சூழ்நிலையிலும் நம்மை ஏமாற்ற முடியாத மனநிலை பெற கிருஷ்ண பகவான் பத்து விதிகள் சொல்கிறார். அதை பற்றி பார்ப்போம்.

1. எவன் ஒருவன் அவனுடைய மனதை அடக்க பழகுகிறானோ அவனே உலகத்தை ஜெயித்தவன் ஆகிறான்.
2. உண்மை தெரியாமல் யார் சொல்வதையும் நம்பக்கூடாது.
3. ஒருவர் பேசுவதை காட்டிலும் அவர்களுடைய செயலில்நாம் கவனம் செலுத்த வேண்டும். அதுதான் அவர்களை பற்றி சொல்லக் கூடியது.
4. ஒரு மனிதனுக்கு பேராசை வந்து விட்டால் அவனுடைய அறிவு மறைந்துவிடும்.
5. எப்பொழுதும் உன்னுடைய உள் உணர்வை நீ கவனமாக கேள். அது என் குரல். அதை துரோகிக்காதே
6. ஒருவர் மீது வைக்கும் அளவு கடந்த நம்பிக்கை ஏமாற்றத்தில் முடியும்.
7. யார் உன்னை அதிகமாக புகழ்ந்து பேசுகிறார்களோ அவர்கள் மீது சற்று அதிக கவனம் செலுத்தி கவனமாக பழக வேண்டும்.
8. எப்பொழுதும் அறிவு என்கின்ற விழிப்புணர்வோடு இருப்பவர்களை எவராலும் வழி தவற செய்ய முடியாது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |