வெயிலின் உக்கிரம்: பகவதி அம்மனுக்கு சிறப்பு பூஜை
கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு பானக்காரம் படைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது.
பங்குனி, சித்திரை வெயில் காலங்களில் மக்கள் தாகத்தை தணிக்க இளநீர், நுங்கு, பானக்காரம், மோர் என குளிர்ச்சியான பானங்களை நாடுவார்கள்.
இதேபோன்று இறைவனுக்கும் வெயிலின் தாக்கத்தை தணிக்க சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு பங்குனி, சித்திரை என இரண்டு மாதங்களும் மாலை 4 மணிக்கு பானக்காரம் வழங்கி பூஜை நடைபெறும்.
மாலை 6.30 மணிக்கு சாயராட்சை தீபாராதனை முடிந்ததும், பானக்காரம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
பானக்காரம் என்பது எலுமிச்சை பழம், சர்க்கரை, ஏலம், சுக்கு, புளி ஆகியவற்றை கரைத்து தயாரிக்கப்படும் பானமாகும்.
இது கோடை வெயிலின் வெப்பத்தை தணித்து உடலை குளிர்ச்சியாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.