கலியுக முடிவில் விழப்போகும் கடைசி தூண்: எங்கு உள்ளது தெரியுமா?

By Yashini Apr 25, 2024 03:30 AM GMT
Report

மஹாராஷ்ட்ரா மாநிலம், அஹமத் நகர் மாவட்டத்தில் ஹரிஸ்சந்திரா காட் கோட்டையில் அமைந்துள்ளது கேதரேஸ்வர் குகை கோயில்.

கேதரேஸ்வர் கோயிலை 6ம் நூற்றாண்டில் காலசூரி வம்சத்தை சேர்ந்தவர்கள் கட்டினார்கள்.

இயற்கை அழகு கொஞ்சும் இவ்விடத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலை தரிசிப்பதற்கும் பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

கலியுக முடிவில் விழப்போகும் கடைசி தூண்: எங்கு உள்ளது தெரியுமா? | A Temple Bearing Kaliyuga On The Last Pillar  

இக்கோயிலில் ஐந்தடி உயரத்தில் சிவலிங்கம் உள்ளது. இந்த சிவலிங்கம் கோயிலின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது.

இங்கே அமைந்திருக்கும் சிவலிங்கம் சுயம்பு மூர்த்தம் என்று கூறப்படுகிறது.

இக்கோயிலுக்குச் சென்று சிவனை தரிசிக்க வேண்டுமானால் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி சென்றுதான் தரிசித்து விட்டு வர முடியும்.

கோடைக்காலத்திலும் இக்கோயிலில் நீர் வற்றாமல் அப்படியேதான் இருக்குமாம். மழைக்காலத்தில் நீர்வரத்து அதிகரித்திருக்குமாம்.

கலியுக முடிவில் விழப்போகும் கடைசி தூண்: எங்கு உள்ளது தெரியுமா? | A Temple Bearing Kaliyuga On The Last Pillar

சிவலிங்கத்தை சுற்றி அமைந்திருக்கும் நான்கு தூண்கள் அமைந்திருக்கும். இந்த ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு யுகத்தை குறிப்பதாகச் சொல்லப்படுகிறது.

அது கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களாகும். ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் ஒவ்வொரு தூண் விழுந்து விட்டதாகக் கூறப்படுகிறது.   

இப்போது இந்த குகை கோயிலில் ஒரேயொரு தூண் மட்டுமே மீதமுள்ளது. அந்தத் தூணும் கலியுகத்தின் முடிவில் விழுந்துவிடும் என்று மக்களால் நம்பப்படுகிறது.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US