செல்வம் பெருக நாளை (03-08-2025) வாங்க வேண்டிய முக்கியமான பொருட்கள்
ஆடி மாதத்தில் வரக்கூடிய 18 ஆம் நாள் மிகவும் சிறப்பான நாளாக பார்க்கப்படுகிறது. இந்த நாளில் பல விசேஷங்களும் வழிபாடும் நடைப்பெறும். மேலும், இந்த நாளில் நாம் வாங்கும் பொருட்கள் பல மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை.
அதோடு, இந்த நாளில் புதிய முயற்சிகள் தொடங்குவது, சுப காரிய பேச்சுக்களை துவங்குவது, புதிய சொத்துக்கள் வாங்குவது போன்ற விஷயங்கள் செய்வது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. மேலும், இந்த நாளில் பலரும் தங்க நகைகள் வாங்கும் பழக்கம் வைத்திருப்பார்கள்.
அவ்வாறு ஆடிப்பெருக்கு அன்று வாங்கும் தங்கம் பல மடங்கு பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை. ஆனால், பலராலும் அன்றைய நாளில் தங்கம் வாங்க முடியாது நிலை இருக்கும். மேலும், தங்கம் வாங்கினால் மட்டுமே வீடுகளில் செல்வம் பெருகும் என்பது இல்லை.
நாளை வீடுகளில் சில முக்கியமான விஷயங்கள் வாங்கி வைப்பதாலும் வீடுகளில் செல்வம் பெருகி மகிழ்ச்சி உண்டாகும்.
ஆடிப் பெருக்கில் வாங்க வேண்டிய பொருட்கள் :
மஞ்சள்
குங்குமம்
தாலிக்கயிறு
வளையல்
கல்
உப்பு
நம்முடைய இந்து மதத்தில் இந்த 5 பொருட்களும் மிக முக்கியமான பொருட்களாக பார்க்கப்படுகிறது. இந்த 5 பொருட்களை நாம் வீடுகளில் வாங்கி வைக்கும் பொழுது நம் வீடுகளில் செல்வத்தையும், சுபிட்சத்தையும் கொண்டு வரும்.
இது தவிர உளுந்தம் பருப்பு, வெல்லம், அரிசி, பருப்பு வகைகள், தானியங்கள் ஆகிய பொருட்களையும் ஆடிப் பெருக்கு நாளில் வாங்குவது சிறப்பு. இவ்வாறு இந்த பொருட்கள் நம் வீடுகளில் வாங்கி வைக்கும் பொழுது நம் சமையல் அறை நல்ல மனம் நிறைந்து காணப்படும்.
அவை நம் வீட்டிற்கு அன்றைய நாளில் மகா லக்ஷ்மி தாயாரின் அருளைப் பெற்றுக் கொடுக்கும். நாளை ஆடிப்பெருக்கு ஆடி மாதத்தின் மட்டும் அல்லாமல் இந்து மதத்தில் கொண்டாடப்படும் முக்கியமான நாளாகும். அன்றைய நாளில் தவறாமல் வீடுகளில் வழிபாடு செய்வதால் நமக்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றமும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







