நாளை ஆடி அமாவாசை... எந்த ராசியினர் எந்த பொருட்களை தானம் செய்யணும்
ஆடி அமாவாசை நாளில் எந்தெந்த ராசியினர் என்னென்ன பொருட்களை தானம் செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஆடி அமாவாசை
தமிழ் மாதங்களில் ஆடி மாதம் மிகவும் மங்களகரமானதாகவும் சிறப்பானதாகவும் கருதப்படுகின்றது. இந்த மாதத்தில் தான் அம்மனுக்கு பல்வேறு பூஜைகள் செய்து வழிபடுவார்கள். இந்த ஆடி மாதத்தில் வரும் அமாவாசை பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏற்றது.
இந்து மத நம்பிக்கைகளின் படி ஆடி மாதத்தில் பித்ருக்கள் பூமிக்கு வருவதாகவும், அந்த மாதத்தில் வரும் அமாவாசை நாளில் அவர்களுக்கு திதி, தர்ப்பணம் மற்றும் சடங்குகளை செய்தால், அவர்களின் ஆத்மா சாந்தியடைந்து, முன்னோர்களின் ஆசியால் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, மகிழ்ச்சி பெருகும்.
2025 ஆம் ஆண்டின் ஆடி அமாவாசை ஜூலை 24ம் தேதியான நாளைய தினம் வருகிறது. அதிகாலை 2.29-க்கு தொடங்கி, நள்ளிரவு 12.40-க்கு முடிகிறது.
மேலும் இந்த அமாவாசை நாளில் பித்ரு தோஷம் உள்ளவர்கள் ஒருசில பொருட்களை தானம் செய்வதன் மூலம், பித்ரு தோஷத்தை நீக்கலாம்.
பித்ரு தோஷம் என்பது முன்னோர்கள் இறந்தவுடன் அவர்களுக்கு செய்ய வேண்டிய சடங்குகள் முறையாக செய்யப்படாமல் இருந்தாலோ அல்லது அவர்களின் ஆத்மா சாந்தியடையாமல் இருந்தாலும் அந்த வம்சத்தினருக்கு ஏற்படும் தோஷமாகும்.
அதோடு ஒருவரது ஜாதகத்தில் 5 மற்றும் 9 ஆம் வீடுகளில் பாவ கிரகங்கள் இருந்தால், பித்ரு தோஷம் இருப்பதாக கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட பித்ரு தோஷம் இருந்தால், அது வாழ்க்கையில் பலவிதமான தடைகளை உருவாக்கி, முன்னேற்றத்தைக் காணவிடாமல், நிறைய கஷ்டங்களை சந்திக்க வைக்கும். இந்த பித்ரு தோஷத்தை நீக்க எந்த ராசியினர் எந்த பொருளை தானம் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் ஆகும். ஆடி அமாவாசை நாளில் இந்த ராசியினர் சிவப்பு நிற ஆடைகளை தானம் செய்வது நல்லது.
ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன் ஆகும். ரிஷப ராசியினர் ஆடி அமாவாசை நாளில் வெள்ளை நிற பொருட்கள் அல்லது ஆடைகளை தானம் செய்வது மிகவும் நல்லது.
மிதுன ராசியின் அதிபதி புதன் ஆகும். மிது ராசியினர் இந்த ஆடி அமாவாசை நாளில் பச்சை நிற ஆடைகளை தானம் செய்வது நல்லது.
கடக ராசியின் அதிபதி சந்திரன். ஆடி அமாவாசை நாளில் தயிரை தானம் செய்வது நல்லது.
சிம்ம ராசியின் அதிபதி சூரியன். இவர்கள் ஆடி அமாவாசை நாளில் சிவப்பு சந்தனத்தை தானம் செய்வது நல்லது.
கன்னி ராசியின் அதிபதி புதன். ஆடி அமாவாசை நாளில் முழு உளுத்தம் பருப்பை தானம் செய்வது நல்லது.
துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். இவர்கள் ஆடி அமாவாசை நாளில் அரியை தானம் செய்வது நல்லது.
விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய் ஆகும். ஆடி அமாவாசை நாளில் வெல்லத்தை தானம் செய்வது சிறந்ததாகும்.
தனுசு ராசியின் அதிபதி குரு பகவான். ஆடி அமாவாசை நாளில் மஞ்சளை தானம் செய்வது சிறந்தது.
மகர ராசியின் அதிபதி சனி பகவான். ஆடி அமாவாசை நாளில் கடுகு எண்ணெயை தானம் செய்வது நல்லது.
கும்ப ராசியின் அதிபதி சனி பகவான். ஆடி அமாவாசை நாளில் கருப்பு உளுந்தை தானம் செய்யவும்.
மீன ராசியை அதிபதி குரு பகவான். ஆடி அமாவாசை நாளில் மாம்பழங்களை தானம் செய்ய வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







