கடலூர் சோலை வாழியம்மனுக்கு பால் குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற சோலை வாழியம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் வருடந்தோறும் ஆடி மாத திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அந்தவகையில், இந்த ஆண்டுக்கான ஆடி மாத திருவிழா நடைபெற்று வருகிறது.
இதையொட்டி, கடந்த 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ராஜயோக அய்யனார் கோவிலில் அய்யனாருக்கு சிறப்பு யாகம் மற்றும் மகா அபிஷேகம் நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை அதாவது நேற்று காலை அய்யனார் மற்றும் சோலை வாழியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
இதற்காக நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
அந்த பாலைக் கொண்டு சாமிக்கு பால் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |