துன்பங்கள் நீங்க ஆடி கிருத்திகை முருகன் வழிபாடு

By Sakthi Raj Jul 26, 2024 10:00 AM GMT
Report

வருகின்ற ஆடி(29-7-2924)ஆடி கிருத்திகை வருகிறது.ஈசனின் நெற்றிக் கண்ணிலிருந்து உதித்தவர் ஞானப் பிழம்பான முருகப் பெருமான்.

சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் பிறந்த ஆறு அக்னிகளும் ஆறு குழந்தைகளாக சரவணப்பொய்கையில் சேர அவற்றை வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள்.

அதனால் முருகப்பெருமான் கார்த்திகைப் பெண்களைத் தன் தாயினும் மேலாகப் போற்றுவார். கார்த்திகைப் பெண்களே கார்த்திகை நட்சத்திரங்களாயினர்.

துன்பங்கள் நீங்க ஆடி கிருத்திகை முருகன் வழிபாடு | Aadi Krithugai Murugan Vazhipaadu Viratham

எனவே, கார்த்திகை நட்சத்திர நாளில் முருகப்பெருமானை வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியது.கிருத்திகை நட்சத்திரம் என்பது சூரியபகவானுக்குரிய நட்சத்திரம்.

ஆடி மாதத்தில் நாகருக்கு சர்ப்ப வழிபாடு செய்வது ஏன்?

ஆடி மாதத்தில் நாகருக்கு சர்ப்ப வழிபாடு செய்வது ஏன்?


சூரியன் கால புருஷ பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி என்பதால் அன்றைய தினம் காவடி எடுத்து, பாலாபிஷேகம் செய்து முருகனை வணங்குவதால் கர்ம வினையால் தடைபடும் புத்திர யோகம்,திருமணம், தொழில் அனுகூலம், வீடு, வாகன யோகம், சொத்து பிரச்சினை, உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை, கடன் நிவர்த்தி, அரச பதவி, அரசாங்க உத்தியோகம், அரசியல் ஆதாயம், நோய் நிவாரணம், புத்திக் கூர்மை, ஆன்ம பலம் பெருகுதல் போன்ற எண்ணிலடங்கா சுப பலன்கள் பெருகும்.

வள்ளல் பெருமானான முருகனை நினைத்து திருப்புகழ், கந்த சஷ்டிக் கவசம், வேல்மாறல் பாராயணம் ஆகியவற்றைப் படிப்பது மிகவும் நல்லது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US