தீராத கஷ்டத்தை தீர்த்து வைக்கும் ஆடி கிருத்திகை(29-07-2024)

By Sakthi Raj Jul 29, 2024 05:30 AM GMT
Report

முருகனுக்கு எல்லா நாளும் எல்லாம் மாதமும் சிறப்பு வாய்ந்த மாதமாக இருந்தாலும்,மற்ற எந்த மாதத்தில் இல்லாத அளவு ஆடி கிருத்திகையில் நிறைய சிறப்புக்கள் இருக்கிறது.

உலகம் எங்கும் பக்தர்கள் தங்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்ற இந்த ஆடி கிருத்திகையில் பல நேர்த்தி கடன்கள்,விரத முறைகளை கடைபிடிக்கின்றனர்.

மேலும் ஆடி மாத கிருத்திகை தேவர்களின் மாலை காலம் ஆகும்.

தீராத கஷ்டத்தை தீர்த்து வைக்கும் ஆடி கிருத்திகை(29-07-2024) | Aadi Kruthigai Murugan Valipaadu

இக்காலத்தில் உப்பில்லா உணவை உண்டு கார்த்திகை விரதம் இருத்தல் வாழ்க்கையில் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப்படுகிறது. பலரும், ஆடி மாதத்தில் இருந்து துவங்கி ஆறு மாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாத கார்த்திகையில் விரதத்தை முடிப்பார்கள்.

நட்சத்திரங்களில் கிருத்திகை சிறப்பு வாய்ந்தவையாகும். முருகன் பிறந்தது விசாக நட்சத்திரம் என்று சொல்லப்பட்டாலும், அவனைப் பாலூட்டி, சீராட்டி வளர்த்தது கார்த்திகை பெண்கள் என்பதால் அவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

செல்வம் பெருகிட வீட்டில் வளர்க்க வேண்டிய பூக்கள்

செல்வம் பெருகிட வீட்டில் வளர்க்க வேண்டிய பூக்கள்


ஆடி கிருத்திகை விரதம் இருப்பது எப்படி?

ஆடி கிருத்திகை தினத்தன்று பூஜையறையை சுத்தம் செய்து முருகனின் படத்திற்கு முன்பு அரிசி மாவில் அறு கோண கோலம் இட வேண்டும். பின்பு முருகனின் படத்திற்கு நெய் தீபமேற்றி, பூக்கள் மற்றும் பழங்களை நிவேதனம் செய்ய வேண்டும்.

பின் கந்த சஷ்டி கவசம் அல்லது சண்முக கவசத்தை முருகனை மனதில் நினைத்து படிக்க வேண்டும். முடிந்தவர்கள் இந்த தினம் முழுவதும் முருகனுக்கு விரதம் இருப்பது சிறப்பு. மாலையில் வீட்டில் அல்லது வீட்டிற்கு அருகாமையில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று முருகனை வழிபட்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.

தீராத கஷ்டத்தை தீர்த்து வைக்கும் ஆடி கிருத்திகை(29-07-2024) | Aadi Kruthigai Murugan Valipaadu 

ஆடி கிருத்திகை விரத பலன்கள் 

முருகா என்று சொல்லவே அனைத்து தோஷமும் விலகும்.அப்படியாக பக்தர்கள் வேண்டியவை யாவும் அருளும் குணம் கொண்டவர் குமரன்.

கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுபவர்கள் நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள குழந்தைகள் ஆகிய பேறுகளை பெற்று சிறப்பாக வாழ்வார்கள்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US