ஆடி மாதத்தில் என்ன செய்யலாம்?செய்யக்கூடாது?
ஆடி மாதம் இறை வழிபாட்டிற்கான மாதம் என்று அனைவரும் அறிந்ததே.இந்த மாதத்தில் குல தெய்வ வழிபாடு, கிராம தேவதை வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு, சிவ வழிபாடு, சக்தி வழிபாடு, திருமால் வழிபாடு, மகாலட்சுமி வழிபாடு என அனைத்து தெய்வங்களையும் வழிபடுவதற்கு ஏற்ற மாதமாகும்.
அப்படி இருக்க ஆடி மாதத்தில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்பதை பற்றி பார்ப்போம்.
ஆடி மாதத்தில் செய்யக்கூடாதவை
ஆடி மாதம் பொறுத்த வரையில் சுப காரியங்கள் எதுவும் செய்யக் கூடாது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதாவது திருமணம், நிச்சயதார்த்தம் கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு போன்ற சுப நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது.
புது வீடு குடி புகுதல், வீடு அல்லது இடமாற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும். அதனால் கிரகப்பிரவேசம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
ஆடி மாதத்தில் குழந்தைகளுக்கு மொட்டை அடிக்கக் கூடாது.
ஆடி மாதத்தில் பெண் பார்க்க செல்வதை தவிர்க்க வேண்டும்.
ஆடி மாதத்தில் செய்ய வேண்டியவை
ஆடி மாதத்தில் நேர்த்திக்கடன், வழிபாடு ஆகியவற்றை செய்யலாம்.
தாலி பெருக்கிக் போடலாம். திருமணமான பெண்கள் தாலி சரடு மாற்றிக் கொள்ளலாம்.
மந்திர ஜபம், யாகம், ஹோமம் ஆகியவற்றை செய்யலாம்.
ஆடி மாதம், வாஸ்து புருஷன் நித்திரை விடும் மாதம் என்பதால் இந்த மாதத்தில் வீடு கட்டுமான பணிகளை துவங்கலாம். மேலும் ஆடிப்பெருக்கு அன்று புது வீடு வாங்க அல்லது நிலம் வாங்க முன்பணம் கொடுக்கலாம்.
குடும்பத்தில் நோய் நொடிகள் நெருங்காமல் இருக்க பெண்கள் ஆடி மாதத்தில் தினமும் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
கூழ் காய்ச்சி அனைவருக்கும் கொடுப்பது, உணவு தானம், வஸ்திர தானம் வழங்குவது மிகச் சிறப்பானதாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |