இன்றைய ராசி பலன்(17-07-2025)
மேஷம்:
இன்று தொழில் ரீதியாக சில சங்கடங்களை சந்திக்க வாய்ப்புகள் உள்ளது. முடிந்த வரையில் உங்கள் கோபத்தை குறைத்துக்கொண்டால் வரும் சிக்கல்களில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.
ரிஷபம்:
சிலருக்கு வெளிநாடு செல்ல வேண்டும் என்று எடுக்கும் முயற்சி நல்ல முடிவைக்கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட தொந்தரவுகள் விலகும். மதியம் மேல் நற்செய்தி தேடி வரும்.
மிதுனம்:
இன்று முடிவு எடுப்பதில் சில சிரமங்களை சந்திக்கலாம். முன்னோர்கள் வழிபாடு ஆறுதலை வழங்கும். கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். ஆடம்பர செலவுகளைக் குறைப்பது நல்லது.
கடகம்:
இன்று வங்கி தொடர்பாக சந்தித்த சிக்கல்கள் விலகும். தாய் வழி உறவால் ஆதரவு கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சகோதரன் வழியில் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் விலகும்.
சிம்மம்:
சமுதாயத்திற்காக சில நற்பணிகளை செய்வீர்கள். குடும்பத்தில் உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட விரிசல் விலகும். நன்மையான நாள்.
கன்னி:
இன்று திருமண வரன் தேடி வரும். வீடுகளில் பொன் பொருள் சேர்க்கையால் மகிழ்ச்சி உண்டாகும். வெளியூர் பயணம் நல்ல மாற்றத்தைக் கொடுக்கும். இறைவழிபாடு நன்மை தரும்.
துலாம்:
ஒரு சிலருக்கு உறவினர்களால் ஏற்பட்ட சிக்கல் விலகும். பிரிந்த சொந்தங்கள் ஒன்று சேருவார்கள். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில் பாராட்டுக்கள் கிடைக்கும்.
விருச்சிகம்:
வீட்டின் தோற்றத்தை மேம்படுத்த வீட்டைச் சுற்றிய சிறிய மாற்றங்கள் செய்வீர்கள். உங்கள் குடும்பத்தாரால் துணைவியுடன் மன வேற்றுமை ஏற்படலாம்.
தனுசு:
இன்று கடைகளில் சாப்பிடுவதை தவிர்க்கலாம். தேவை இல்லாத மருத்துவ செலவுகள் சந்திக்க வாய்ப்புகள் உள்ளது. பிள்ளைகள் நலனில் கட்டாயம் அக்கறை செலுத்த வேண்டும்.
மகரம்:
இன்று உங்கள் வேலையில் சுயநலமாக இருப்பது நல்லது. தேவை இல்லாமல் பேசுவதால் சில வம்பு வழக்குகள் சந்திக்க நேரலாம். பொருளாதாரத்தில் ஏற்பட்ட சிக்கல் விலகும்.
கும்பம்:
இன்று ஒரு சிலரின் உண்மை முகத்தை பற்றி புரிந்துக் கொள்வீர்கள். வண்டி வாகனத்தில் கவனமாக செல்ல வேண்டும். புதிய ஆடை வாங்கி மகிழ்வீர்கள். சந்தோஷமான நாள்.
மீனம்:
இன்று உங்களுக்கு எதிராக செயல்பட்ட சிலர் விலகி செல்வார்கள். உங்களைப் பற்றி உங்கள் குடும்பத்தினர் நன்றாக புரிந்துக் கொள்வார்கள். எதிர்பாராத நற்செய்தி உங்களை தேடி வரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







