சங்கரன்கோவிலில் ஆடித்தபசு பக்தர்கள் வழிபாடுகளில் மிகவும் முக்கியமானது ஆடிச்சுற்று.
12 நாட்கள் நடைபெறும் ஆடித்தபசு திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபடுவார்கள்.
சங்கரலிங்க சுவாமி, சங்கரநாராயண சுவாமி, கோமதி அம்மன் சன்னதிகளை உள்ளடக்கிய கோவில் வெளிப்பிரகாரத்தை 108 முறை சுற்றுவதே ஆடிச்சுற்று ஆகும்.
ஆடித்தபசு கொடியேற்றத்திற்கு பின் ஆடிச்சுற்றில் பக்தர்கள் கோவிலை 101, 501, 1001 என்ற எண்ணிக்கையுடன் சுற்றி நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.
ஆடிச்சுற்று சுற்றுவதால் ஒரு காலில் நின்று தபசு காட்சியருளும் அம்பாளின் கால் வலியை தாம் ஏற்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
அம்பாளும் தனது கால் வலியை ஏற்கும் பக்தர்களின் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்களையும், சோதனைகளையும் அகற்றுகிறாள்.
பக்தர்கள் தங்களின் பல்வேறு வேண்டுதல்களை மனதில் வைத்து, கோமதி அம்மனை வேண்டி ஆடிச்சுற்று செல்கிறார்கள்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சங்கரன் கோவிலில் பல நாட்கள் தங்கி ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம் தொடங்கிய பின் ஆடிச்சுற்று செல்கிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |