ஆடிப்பெருக்கு 2025: அன்று வழிபாடு செய்யும் பொழுது சொல்ல வேண்டிய 108 காவிரி போற்றி மந்திரங்கள்

By Sakthi Raj Aug 01, 2025 04:25 AM GMT
Report

ஆடிமாதத்தில் வரக்கூடிய ஆடிப்பெருக்கு மிகவும் முக்கிய விசேஷமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினத்தில் பல சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். அதிலும் குறிப்பாக, இந்த விழா காவிரி நதிக்கரையை ஓட்டி மிக சிறப்பாக கொண்டாடப்படும்.

மேலும், விவசாயிகள் புதுவெள்ள நீரைத் தொழுது தங்கள் உழவுப் பணிகளைத் தொடங்குவர். அவ்வாறு வழிபாடு செய்யும் ஆற்றின் கரையோரம் படித்துறைகள் அமைக்கப்பட்டு இருக்கும். அந்த படித்துறைகள் 18 படிகள் கொண்டதாக இருக்கும்.

ஆடிப்பெருக்கு அன்று ஆறுகளுக்கு சென்று வழிபாடு செய்ய முடியாதவர்கள் வீடுகளில் இருந்தே காவிரியை, வைகையை, தாமிரபரணியை மனதால் வணங்கி ஆடி பதினெட்டாம் பெருக்கு நாளை கொண்டாடலாம்.

அப்படியாக, அந்த நாளில் நாம் நீர்நிலைகளில் இருந்து வழிபாடு செய்யும் பொழுது சொல்ல வேண்டிய 108 மந்திரங்கள் பற்றி பார்ப்போம். இதை சொல்லி வழிபாடு செய்யும் பொழுது நாம் மனதில் நினைத்த காரியம் காவிரி தாயின் அருளால் உடனே நடக்கும் என்பது நம்பிக்கை.

ஆடிப்பெருக்கு 2025: அன்று வழிபாடு செய்யும் பொழுது சொல்ல வேண்டிய 108 காவிரி போற்றி மந்திரங்கள் | Aadiperuku 2025 108 Kaveri Pootri Manthirangal

காவிரி 108 போற்றி :

1. ஓம் லோபா முத்ரையே போற்றி

2. ஓம் அகஸ்தி பத்தினியே போற்றி

   3. ஓம் காவேர ராஜரிஷி மகளே போற்றி

4. ஓம் பிரம்மா மானஸ புத்திரியே போற்றி

5. ஓம் சுத்தமாயா சக்தியே போற்றி

6. ஓம் ஹாதிவித்யா தலைவியே போற்றி

7. ஓம் பொன்னியே போற்றி

8. ஓம் புண்ய தீர்த்தமே போற்றி

9. ஓம் தேவஜோதியே போற்றி

10. ஓம் ஸஹ்யாசலவாசிநியே போற்றி

11. ஓம் பாவங்களைப் போக்குபவளே போற்றி

12. ஓம் விரும்பியவற்றை அருள்பவளே போற்றி

13. ஓம் வீடுபேறு அளிப்பவளே போற்றி

14. ஓம் அகஸ்திய கமண்டல வாசினியே போற்றி

15. ஓம் கும்பமுனி பத்தினியே போற்றி

16. ஓம் செளந்தரியே போற்றி

17. ஓம் விஷ்ணுமாயையே போற்றி

18. ஓம் பிதிருதேவதாபிரியையே போற்றி

19. ஓம் பிரம்மா சாபமோசனியே போற்றி

20. ஓம் விஷ்ணு சாபமோசனியே போற்றி

21. ஓம் வீரஹத்திதோஷ நாசினியே போற்றி

22. ஓம் குடமுனி பத்திரினியே போற்றி

23. ஓம் சித்தயோகினியே போற்றி

24. ஓம் பிரம்மச்சாரிணியே போற்றி

25. ஓம் விதர்ப்ப நாட்டு மகளே போற்றி

26. ஓம் நதி ரூபிணியே போற்றி

27. ஓம் பாவ விமோசனியே போற்றி

28. ஓம் சாப விமோசனியே போற்றி

29. ஓம் சர்யா நாதார் சிஷ்யையே போற்றி

30. ஓம் ஸ்ரீவித்யா மந்தர வடிவே போற்றி

31. ஓம் பொதியமலை வாசியே போற்றி

32. ஓம் யோக சித்தியே போற்றி

33. ஓம் மந்த்ர சித்தியே போற்றி

34. ஓம் இத்மவாஹன் அன்னையே போற்றி

35. ஓம் ஜல ரூபிணியே போற்றி

36. ஓம் கன்னியே போற்றி

37. ஓம் பிரம்மகிரி வாசினியே போற்றி

38. ஓம் முக்கூடல் தீர வாசினியே போற்றி

39. ஓம் சம்பா பதி வாசினியே போற்றி

40. ஓம் கவிரிபூம்பட்டின வாசினியே போற்றி

41. ஓம் சாயபுர சக்தி பீட வாசினியே போற்றி

42. ஓம் பூரணியே போற்றி

43. ஓம் ஈங்கோய்மலை வாசினியே போற்றி

44. ஓம் அகண்ட காவேரியே போற்றி

45. ஓம் மத்திய அகண்டகாவேரியே போற்றி

46. ஓம் 66 கோடிதீர்த்த பாவமோசனியே போற்றி

47. ஓம் புண்யதீர்த்தமே போற்றி

48. ஓம் மஹாதேவியே போற்றி

2025 ஜூலை மாதத்தோடு இந்த ராசிகளின் கெட்ட காலம் முடிகிறதாம்- எந்த ராசிகளுக்கு தெரியுமா?

2025 ஜூலை மாதத்தோடு இந்த ராசிகளின் கெட்ட காலம் முடிகிறதாம்- எந்த ராசிகளுக்கு தெரியுமா?

 

49. ஓம் தட்சணதேச வாசினியே போற்றி

50. ஓம் பசுமையை காப்பவளே போற்றி

51. ஓம் லோகபாவனியே போற்றி

52. ஓம் ஸமுத்ரகாமிநியே போற்றி

53. ஓம் கவேரபுத்ரியே போற்றி

54. ஓம் வேதங்களால் புகழப்படுபவளே போற்றி

55. ஓம் கருணைக் கடலே போற்றி

56. ஓம் நான்முகன் மகளே போற்றி

57. ஓம் பதிவ்ரதாதேவியே போற்றி

58. ஓம் திவ்யமானவளே போற்றி

59. ஓம் மங்கள ரூபிணியே போற்றி

60. ஓம் பவித்திரமானவளே போற்றி

61. ஓம் புத்தி, முத்தி, சாந்தியை கொடுப்பவளே போற்றி

62. ஓம் இனியவளே போற்றி

63. ஓம் பாபநாசினியே போற்றி

64. ஓம் ஹயக்ரீவரால் வணங்கப்பட்டவளே போற்றி

65. ஓம் 51 உபநதிகளை உடையவளே போற்றி

66. ஓம் ஜகன்மாதாவே போற்றி

67. ஓம் முனிவர்களால் பூஜிகப்படுபவளே போற்றி

68. ஓம் பரிசுத்தமானவளே போற்றி

69. ஓம் நதிகளின் நாயகியே போற்றி

70. ஓம் தேவர்களால் வழிபடுபவளே போற்றி

71. ஓம் உத்தமமானவளே போற்றி

72. ஓம் தயா நிதியே போற்றி

73. ஓம் மாசற்றவளே போற்றி

74. ஓம் தட்சணகங்கையே போற்றி

75. ஓம் கருணாமூர்த்தியே போற்றி

76. ஓம் காவேர ரிஷியின் குலதனமே போற்றி

77. ஓம் ஞானவடிவே போற்றி

78. ஓம் செந்நெல் தருவோய் போற்றி

79. ஓம் அரங்கனைச் சூழ்ந்தவளே போற்றி

80. ஓம் தண்தமிழ் பாவையே போற்றி

81. ஓம் நெல்லிமரதீர்த்ததாரையே போற்றி

82. ஓம் வனதேவதையே போற்றி

83. ஓம் விரும்பியவரம் அளிப்பவளே போற்றி

84. ஓம் நாவலந்தீவில் வசிப்பவளே போற்றி

85. ஓம் ஆசாபாச கற்பரசியே போற்றி

86. ஓம் உத்தம கற்பரசியே போற்றி

87. ஓம் கர்நாடகவாசியே போற்றி

88. ஓம் திராவிடவாசியே போற்றி

89. ஓம் கடலில் கரைபவளே போற்றி

90. ஓம் சுமங்கலியே போற்றி

91. ஓம் துர்வாசர் மாணவியே போற்றி

92. ஓம் 64 இலக்கண முடையவளே போற்றி

93. ஓம் தஞ்சை பெரிய கோவில் உடையாய் போற்றி

94. ஓம் திருச்சி மலைக்கோட்டையுடையாய் போற்றி

95. ஓம் மாயூரவசினியே போற்றி

96. ஓம் லலிதை பக்தையே போற்றி

97. ஓம் பாரதவாசிநியே போற்றி

98. ஓம் சிவாலயம் உடையோய் போற்றி

99. ஓம் விஷ்ணு ஆலயம் உடையோய் போற்றி

100. ஓம் சக்தி ஆலயம் உடையோய் போற்றி

101. ஓம் சோழமண்டல வாசினியே போற்றி

102. ஓம் சேரநாடு செழிப்படைய செய்பவளே போற்றி

103. ஓம் கொங்குநாடு உய்யச் செய்பவளே போற்றி

104. ஓம் விவசாயிகளின் தேவியே போற்றி

105. ஓம் நால்வரால் புகழப்பெற்றவளே போற்றி

106. ஓம் சங்க இலக்கியம் வளர்த்தவளே போற்றி

107. ஓம் காவிரி தேவியே போற்றி

108. ஓம் போற்றி போற்றி ஸ்ரீராஜராஜச்வரியின் வடிவானளே போற்றி போற்றி

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US