வியப்பில் ஆழ்த்தும் முக்கியமான ஆன்மீக தகவல்கள்

By Sakthi Raj Apr 02, 2024 08:32 AM GMT
Report

விநாயகர் மீது கச்சியப்பமுனிவர் இயற்றிய காரியசித்தி மாலையை குழந்தைகள் தினமும் விநாயகரை நினைத்து வழிபட்டு பாடி வர படிப்பில் மேன்மை அடைவார்கள்.

வியப்பில் ஆழ்த்தும் முக்கியமான ஆன்மீக தகவல்கள் | Aanmeega Thagval Sivan Murugan

விநாயகர் வழிபாட்டில் சிறப்பே அவரை வலம் வருவது தான். ஏனென்றால் அவர் தான் தன் பெற்றோர்களை வலம் வந்து பழமும் பலனும் அடைந்தார்.

வேகமாக ஓடும் உலகத்தில் நாம் யாரும் வேண்டும் என்றே பாவங்கள் செய்வதில்லை, அறியாமை சில கால சூழ்நிலைகளால் தவறு செய்து பின் அந்த பாவத்தினால் பல இன்னல்களை சந்தித்து பாவவிமோச்சனம் தேடுவோம். அப்படி இருக்க வைகாசி மாதம் முதல் தேதியில் கங்கையில் நீராடினால் ஏழு ஜென்ம பாவங்களும் தீரும்.

வியப்பில் ஆழ்த்தும் முக்கியமான ஆன்மீக தகவல்கள் | Aanmeega Thagval Sivan Murugan

நம் வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வாக ஒன்று திருமணம், பின்பு குழந்தை பேறு. ஆனால் இதில் பலருக்கு திருமண யோகம் விரைவில் நடந்து குழந்தை பாக்கியமும் சீக்கிரம் கிடைத்து விடும். ஆனால் சிலருக்கு இந்த இரண்டுமே மிக சிக்கலாக அமைந்து இருக்கும், அப்படி இருப்பவர்கள் தென்காசி மாவட்டம் ஆய்குடி முருகன் கோயிலில் கொடுக்கப்படும் படிப்பாயசம் சாப்பிட்டால் குழந்தை பேறு கிடைத்து சந்தோஷமாக வாழ்வார்கள்.

வியப்பில் ஆழ்த்தும் முக்கியமான ஆன்மீக தகவல்கள் | Aanmeega Thagval Sivan Murugan

சிவ பெருமானுக்கு பசுபதி என்றும் பெயருண்டு. அதாவது "பசு" என்பது நம்மை குறிக்கும் "பதி "என்றால் தலைவனை குறிக்கும். சைவ சித்தாந்தத்தில் பதி- பசு -பாசம் என்று சொல்லப்படும் இதையே ஆதிசங்கரர் தனது அத்வைத வேதாந்தத்தில் பிரம்மம்- ஜீவன் மாயை என்று சொல்கிறார்.

மேலும் தெய்வம் என்றால் "விதி "கடவுள் நம்மக்கு கொடுக்கும் கர்மா வினையே "விதி" 

நம் வேதத்தில் ஆறு அங்கம் உள்ளன. அதில் ஒன்று ஜோதிடம். இதை வேதத்தின் கண் என அழைக்கிறோம், நல்ல காலத்தை நிர்ணயம் செய்து ஒரு விஷயத்திற்கு ஜோதிடம் நம்மை அழைத்து செல்வதால் இதற்கு நயனம் (கண்) என்ற பெயரும் உண்டு.

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US