ஆஷாட நவராத்திரியில் வராகி அம்மனை எப்படி வழிபாடு செய்யவேண்டும்
நவராத்திரிகளில் முக்கியமான நவராத்திரியாக ஆஷாட நவராத்திரி வழிபாடு செய்யப்படுகிறது.அப்படியாக ஜூலை 6-ம் தேதி முதல் தொடங்கி 9 நாட்கள் நடைபெறுகிறது.
இந்த ஆஷாட நவராத்திரி என்றால் என்ன ?எப்படி கொண்டாட வேண்டும் என்று பார்ப்போம்.
ஆஷாட நவராத்திரி வராஹி அம்மனுக்கு உகந்ததாக கருதப்படுகிறது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஆஷாட நவராத்திரியில் வாராகி அம்மனை வழிபாடு செய்ய முதலில் ஒரு தீபம் ஏற்றி கொள்ள வேண்டும். அதாவது, ஜூலை 6 முதல் ஜூலை 15-ம் தேதி வரை ஒரு அணைய விளக்கு ஏற்ற வேண்டும்.
இந்த நாட்களில் வரும் வளர்பிறை பஞ்சமி திதி அன்னையின் அருளை எளிதில் பெற மிகச்சிறந்த நாளாகும்.இந்த ஆஷாட நவராத்திரியில் பூஜைக்குறிய நேரம் இரவு எட்டு மணிக்கு மேல். வீட்டில் வாராஹி விக்ரஹம் அல்லது படம் இல்லை என்றாலும் தீபம் ஏற்றி அதையே அன்னை வாராஹியாக பாவித்து வழிபடலாம்.
கணபதி, குரு மற்றும் குல தெய்வ வழிபாட்டுடன் பூஜையை முறைப்படி துவங்க வேண்டும்.
பிறகு, சரியாக இரவு 9 மணிக்கு வாராகி அம்மனை மனதில் நினைத்துக்கொண்டு, ஒரு புது நோட்டு பேனா எடுத்து, அதில் நம் மனதில் என்ன வேண்டுதல் குறைகள் இருக்கிறதோ அந்த வேண்டுதலை அந்த நோட்டில் எழுத வேண்டும்.
ஆஷாட நவராத்திரியில் இப்படி வேண்டிக்கொண்டு வழிபட்டால், நிச்சயமாக வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |