வந்த துயரங்கள் எல்லாம் விலக பாட வேண்டிய பாடல்
மனிதனாக அல்ல பூமியில் பிறந்த அனைத்து உயிரினத்திற்குமே இன்பம் துன்பம் என மாறி மாறி வரும்.அதில் பிற உயிர்களை காட்டிலும் மனிதன் தான் தன் துயர் நிலை அறிந்து மனம் வேதனை பட்டு கொண்டே இருப்பான்.ஒருவருக்கு துயர் நிலை எப்பொழுது உண்டாகிறது?
அதாவது அவன் முற்பிறவியில் செய்த பாவங்கள் அனைத்தும் இந்த பிறவியில் தொடரும்.நம்முடைய வார்த்தை எண்ணம் எல்லாவற்றிக்கும் பலன் அதிகம்.
ஆதலால் எண்ணம் முதல் செயல் வரை பிறருக்கு தீங்கு விளைவிக்காத செயலாக வார்த்தைகளாக இருக்கவேண்டும் என்று ஆன்மீகம் சொல்கிறது.
நம்முடைய எண்ணங்களுக்கும் கர்ம வினை உண்டு. இப்படியாக சிலர் என்னதான் நல்ல எண்ணம் செயல் இருந்தாலும்,நேரங்களில் அவர்களை அறியாமல் பல துன்பங்கள் நேர்ந்து விடும்.
அப்பொழுது அவர்களுக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டார் போல் ஆகிவிடுவார்கள்.அதாவது நான் எள் அளவும் பிறருக்கு தீங்கு நினைக்கவில்லை விளைவிக்கவில்லை என்று எண்ணி வருந்துவதுண்டு.
அப்படியான கால கட்டம் தான் கிரகநிலை அமைப்பு.ஜாதகம் என்கின்றோம். ஒருவருக்கு கிரகநிலை சரியாக இல்லை என்றால் இது போன்ற எதிர் பாராத துன்பங்கள் நேர்ந்துவிடும்.
அப்பொழுது அவர்கள் செய்யவேண்டிய ஒரே விஷயம் இறைவழிபாடு.இறைவழிபாட்டில் மிக சக்தி வாய்ந்த வழிபாடு அம்மன் வழிபாடு.
அம்மனை மனதார நினைத்து உருகி பாடல் பாட மனக்கவலைகள் எல்லாம் விலகி உடம்பிலும் மனதிலும் தெம்பு பிறக்கும்.
அந்த வகையில் அம்பிகையை நினைத்து அபிராமி பட்டரால் பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு தான் அபிராமி அந்தாதி.இந்த அபிராமி அந்தாதியை எவர் ஒருவர் பாடி வேண்டுதல்கள் வைக்கின்றனரோ அவர்களுக்கு வாழ்க்கையில் எல்லா வித நலன்களும் பிரச்சனைகளும் விலகும்.
இந்த பாடலை அனைவரும் தங்களுடைய வீட்டில் பூஜை செய்யும் பொழுது பாட வேண்டும். அதைவிட மிகவும் குறிப்பாக ரோகிணி, அஸ்தம், திருவோணம் போன்ற நட்சத்திரங்களில் பிறந்த நபர்கள் கண்டிப்பான முறையில் அம்பிகையை வழிபடும் பொழுது இந்த பாடலை பாட வேண்டும்.
இதோடு யாருக்கெல்லாம் சந்திரதிசை நடக்கிறதோ அவர்கள் எல்லாம் இந்த பாடலை பாடுவது என்பது சிறப்பு.
ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை,அண்டம் எல்லாம்
பூத்தாளை,மாதுளம் பூ நிறத்தாளை,புவி அடங்கக்
காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கருப்புவில்லும்
சேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.
விளக்கம்
அன்னையவளை எங்கள் அபிராமி வல்லியை அகிலஉலகும் அரும்பியவளை மாதுளச் செந்நிறத்தவளை புவிமுழுதும் அடக்குபவளை அங்குச பாசம் கரும்பு வில்லும் திருக்கரத்தில் அணிந்தவளை வழிபட அடியார்க்கொரு தீங்கில்லையே அனுதினமவளை தொழுவோம் தொழுதே எழுவோம்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |