அபிஷேக நீர் அருந்தினால் நோய் தீரும்: எங்கு தெரியுமா?

By Yashini May 15, 2024 07:15 PM GMT
Report

கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் திருநரையூரில் சிவபெருமான் சித்தநாதன் என்ற பெயருடன் காட்சி தருகிறார்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் இம்மூன்றாலும் பெருமையுடைய இத்திருத்தலம் மகாலட்சுமி அவதாரம் நிகழ்ந்த சிறப்புடையது.

இங்குள்ள தலமூர்த்தி சித்தநாதரை நோக்கி பதினெண் சித்தர்களுள் ஒருவரான கோரக்கச் சித்தர் இத்தலத்திற்கு வந்து தவம் புரிந்தார். 

அபிஷேக நீர் அருந்தினால் நோய் தீரும்: எங்கு தெரியுமா? | Abisheka Neer Arunthinaal Noi Theerum

அவர் முன்பு தோன்றி தரிசனம் கொடுத்ததால் பரமேஸ்வரருக்கு சித்தநாதர் என்ற பெயர் ஏற்பட்டது.

இத்தல மூர்த்திக்கு சாதாரணமாக ஒரு குடம் நீரை அபிஷேகம் செய்வித்து அதனை பிரசாதமாக குடித்தால் உடம்பில் உள்ள அனைத்து வித நோய்களும் தீரும் என்று சொல்கிறார்கள்.

அபிஷேக நீர் அருந்தினால் நோய் தீரும்: எங்கு தெரியுமா? | Abisheka Neer Arunthinaal Noi Theerum

பாண்டிய நாட்டு மன்னர் சந்திரகுப்தன் குஷ்டரோகம் ஏற்பட்டு அதனால் வருந்தி பல தலங்களுக்கும் சென்றான்.

அப்போது அவன் கனவிலே சித்தநாதர் தோன்றி நரையூருக்கு வா என்று அழைக்க அதன்படி இங்கு வந்த மன்னன் 1008 குடம் பால் அபிஷேகம் செய்விக்க அவனது குஷ்டரோகம் உடனே குணமானது.   

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US