அகல் விளக்கு உணர்த்தும் வாழ்க்கையின் தத்துவம் என்ன?
நாம் அகல் விளக்கு பற்றி கேள்வி பட்டு இருப்போம்.பெரும்பாலும் கோயில்களில் பக்தர்கள் அவர்கள் வேண்டுதலை நிறைவேற்ற சுவாமிக்கு தீபம் போட்டு வழிபடுவது இந்த அகல்விளக்கில் தான்.
அப்படியாக கோவில்களில் மட்டும் அல்லாமல் வீடுகளிலும் நம் அகல் விளக்கு வைத்து வழிபடுகிறோம். அந்த அகல்விளக்கில் வெறும் விளக்காக மட்டும் அல்லாமல் அதில் நவக்கிரகங்களும் வீற்றிருக்கின்றன என்கின்றனர்.
மேலும் அகல் விளக்கு எடுத்துரைக்கும் வாழ்க்கை தத்துவங்கள் பற்றி பார்ப்போம்.
அகல் விளக்கு - சூரியன்
நெய்/எண்ணெய் - சந்திரன்
திரி - புதன்
எரியும் ஜூவாலை - செவ்வாய்
கீழே விழும் ஜூவாலையின் நிழல் - ராகு
ஜூவாலையில் உள்ள மஞ்சள் நிறம் - குரு
ஜூவாலையால் பரவும் வெளிச்சம் - கேது
திரி எரிய எரிய குறைந்துகொண்டே வருவது - சுக்ரன்
தீபம் அணைந்ததும் அடியில் இருக்கும் கரி - சனி
ஒரு மனிதன் வாழ நல்ல ஆரோக்கியம் நல்ல பண்பு அவசியம்.அதாவது உலகின் பேராபத்து ஆசை.அந்த ஆசை ஒரு மனிதனை அழித்து விடும்.
அப்படியாக இதில் அகல் விளக்கில் உள்ள சுக்ரன், ஆசையை குறிப்பதாகும். ஆசையை குறைத்துக் கொண்டால்,நம் வாழ்க்கையில் இன்பம் வந்து சேரும்.
பொதுவாக ஓர் மனிதனின் அழிவிற்கு முதற்கட்டமாக இந்த ஆசை தான் நிற்கிறது. அந்த ஆசை தான் ஒருவர் ஆன்மீகத்தில் வளரமுடியாமலும் அவர்கள் வாழ்க்கையில் முக்தி கிடைக்கவிடாமல் நம்மை மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கச் செய்கிறது. இதுவே அகல் தீபம் நமக்கு உணர்த்தும் தத்துவம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |