திருப்பதி: இனி 1 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்ய அறிமுகப்படுத்தப்படும் புதிய வசதிகள்
திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார். அப்படியாக அவரை தரிசனம் செய்ய நாம் முன்பதிவுகள் செய்ய வேண்டும். இருப்பினும் சில நேரங்களில் முன்பதிவு செய்து இருந்தாலும் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்யும் நிகழ்வுகள் நடக்கிறது.
அதோடு திருப்பதி தேவஸ்தானமும் பல்வேறு புதிய மாற்றங்களும் பக்தர்களின் நலனுக்காக கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது பக்தர்கள் காலையில் தரிசன டிக்கெட் பெற்றுக் கொண்டால் அவர்கள் மாலையில் சுவாமியை தரிசனம் செய்து விடலாம் என்ற ஒரு சலுகையை கொண்டு வந்திருக்கிறார்கள்.
அதோடு தரிசனத்தை இன்னும் விரைவாக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறுகிறார்கள். இதன் வழியாக பக்தர்கள் வெறும் இரண்டு மணி நேரத்திற்குள் சுவாமியை தரிசனம் செய்து விடலாம் என தெரிவித்திருக்கிறார்கள்.
அதோடு பிரசாத விற்பனை செய்யும் இடத்திலும் தரிசன டிக்கெட் செய்து கொள்ளும் இடத்திலும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதை தடுக்கும் விதமாக திருமலையில் சைபர் பாதுகாப்பு ஆய்வகம் தொடங்கப்பட உள்ளது.
இந்த நடவடிக்கையால் மோசடி வளையத்தளங்கள் மற்றும் போலியான பிரசாத விற்பனையைத் தடுக்கவும் உதவவும் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். TTD யில் மேற்கொள்ளும் இந்த மாற்றங்கள் திருப்பதிக்கு வருகை தரும் கோடிக்கணக்கான பக்தர்களுக்கு உதவியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு அன்னதானம் தரிசனம் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தொழில்நுட்பம் மற்றும் வெளிப்படை தன்மை கொண்ட சீர்திருத்தங்களை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் உறுதி படுத்துகிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







