அட்சய திரிதி நாளில் இத்தனை அதிசயங்கள் நடந்திருக்கிறதா?
அட்சய திரிதி என்றால் தங்கம் வாங்க வேண்டும் என்று தான் முதலில் எல்லோருக்கும் தோன்றும்.ஆனால் உண்மையில் அந்த நாளில் நிறைய அற்புதங்கள் நடந்திருக்கிறது,அதை பற்றி பார்ப்போம்
வடக்கு திசையின் காவலர் குபேரன். இவர் அட்சய திரிதி நாளில் தான் செல்வங்களின் அதிபதியானார்.
பாரதம் போற்றும் மகாபாரதத்தை விநாயகர் எழுத தொடங்கிய நாளும் இன்று தான்.
தன் நண்பரான குசேலர் கொடுத்த அவளை கிருஷ்ணர் சாப்பிட்ட நாள். இதனால் குசேலருக்கு மகாலட்சுமியின் அருள் கிடைத்த அற்புதமானநாள்.
பெருமாளின் மார்பில் மகாலட்சுமி இடம் பிடித்த நாளும் இன்றும் தான்.
மேலும் பரசுராமர் பலராமர் அவதாரம் நிகழ்ந்தது நாளும் அட்சய திரிதியில் தான்.
முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மா உலகை படைத்தார்.
ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரத்தை பாடியதால் தங்க நெல்லிக்கனி மழையாக பொழிந்தது.
பாண்டவரின் மனைவியான திரௌபதிக்கு அட்சய பாத்திரம் கிடைத்த நாள்.
அஸ்தினாபுரம் சபையில் திரௌபதிக்கு அவமானம் பட ஆடைகளை கொடுத்து மானத்தை காத்தார் கிருஷ்ணர். இப்படி பல விஷயங்கள் நடந்த நன்னாளாக இந்த அட்சய திரிதி இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |