அழகர் அணியும் மாலை எங்கு இருந்து வருகின்றது தெரியுமா?
மதுரை அரசி மீனாட்சி திருமணம் முடிந்தது.இன்று ஏப்ரல் 22 வெகு விமர்சையாக தேரோட்டம் நடை பெற்று வருகிறது. நாளை அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்.
அந்த வைபவத்தை காண மொத்த மதுரையே நொடிப்பொழுதை கணக்கிட்டு கொண்டு இருக்கின்றனர்.
அப்படியாக தல்லாகுளம் பெருமாள் கோயிலிருந்து தங்க குதிரை வாகனத்தில் வைகை நோக்கி புறப்படும் முன்பு அழகருக்கு ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சூடிக்கொடுத்த நாச்சியராகியாக ஆண்டாள் மாலையை தான் அழகர் சாற்றி கொள்கிறார்.
ஸ்ரீஅழகர் ஆற்றுக்குச் செல்லும் பொழுது முதலில் வெட்டி வேர் சப்பரத்திலும், பிறகு மைசூர் மண்டபத்திலிருந்து ஆயிரம் பொன் சப்பரத்திலும் எழுந்தருளும் காட்சியை காண கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
பின் தல்லாகுளத்தை விட்டு தங்கக்குதிரையில் கள்ளழகர் கிளம்பியதுமே வைகை ஆற்றில் ஆவலுடன் காத்திருக்கும் பக்தர்களின் ஆரவாரம் ஆரம்பமாகிவிடும்.
வைகையில் ஓடும் நீரில் நின்று கொண்டு தன்னை தரிசிக்க ஆவலுடன் காத்திருக்கும் பக்தர்களைக் காண ஆடி, அசைந்து வரும் அழகரை காணவே பல கோடி பிறப்பு எடுக்கவேண்டும் என்பது போல் அத்தனை அழகாய் கம்பிரமாக வருவார்.
அழகர் வைகையில் இறங்கிய கள்ளழகர், மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருவதற்காக வண்டியூரை நோக்கிக் கிளம்புவார் அழகர். ஆற்றில் இறங்கிய அழகர் ஆற்றின் வழியாகவே வண்டியூர் போய்ச் சேருகிறார்.
கூடவே பக்தர்களும் அழகருடன் பயணப்படுகின்றனர். வண்டியூரில் பயணக்களைப்பு நீங்குவதற்காக சந்தன அலங்காரம் பண்ணிக்கொள்ளும் கள்ளழகர், அங்குள்ள பெருமாள் கோயிலை வலம் வந்து, அதன்பிறகு சர்ப்பவாகத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபம் வந்து சேருகிறார்.
தேனூர் மண்டபத்தில் தங்க கருட வாகனத்துக்கு மாறும் அழகர், அங்கு தன் வருகைக்காக தவம் செய்து கொண்டிருக்கும் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் தருகிறார்.
பிறகு தேனூர் மண்டபத்திலிருந்து மதுரை நோக்கிவரும் அழகர், ராமராயர் மண்டகப்படி மண்டபத்துக்கு இரவில் வந்து சேருகிறார். அங்கு தங்குகிறார்.
இரவு முழுவதும் தசாவதார அலங்காரங்களில் தோன்றி பக்தர்களைப் பரவசப்படுத்தும் அழகர், அங்கிருந்து அனந்தராயர் பல்லக்கில் தல்லாகுளத்திலுள்ள சேதுபதிராஜா மண்டபம் வரைக்கும் வருவார்.
அன்றையதினம் இரவு அங்கு அழகருக்கு அலங்காரம் கலைக்கப்பட்டு பூப்பல்லக்கில் ஜோடனை நடக்கும். மறுநாள் அதிகாலையில் பூப்பல்லக்கில் மலைநோக்கிக் கிளம்பும் அழகர் வழிநெடுக பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்தவாரே அழகர் கோயிலைச் சென்றடைவார்.
16ம் நுாற்றாண்டு வரை, கள்ளழகர் அழகர்கோவிலில் இருந்து புறப்பட்டு அலங்காநல்லுார், தேனுார் ஆகிய ஊர்கள் வழியாக சோழவந்தான் வந்து அங்குள்ள வைகையாற்றில் இறங்கி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
சைவம், வைணவ சமயங்களை ஒன்று சேர்க்கும் விதத்தில் திருமலை நாயக்கர் இந்த விழாவை மதுரைக்கு மாற்றியமைத்தாராம்.
மலையை விட்டு இறங்கும் அழகரை எதிர்கொண்டு அழைத்து மதுரை மக்கள் எப்படி வரவேற்பு கொடுத்தார்களோ அதேபோல அவரை வழியனுப்பவும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மதுரை எல்லையான புதூர், மூன்றுமாவடி பகுதிகளில் திரண்டு நின்றிருப்பது சிறப்பு.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |