இன்று அமாசோம அமாவாசை: அரசமரம் சுற்றி வர கிடைக்கும் நன்மைகள்
கோயில்களில் அரசமரம் மிக விஷேசம் ஆனவை. குழந்தை இல்லாதவர்கள் இறைவனிடம் பல கோரிக்கையுடன் அரசமரத்தை சூற்றி வருவர்.
அப்படி சுற்றி வர நாம் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது மக்களின் நம்பிக்கையாக காலம் காலமாக இருந்து வருகிறது. அப்படியாக அரசமரத்தை சுற்றி வர கிடைக்கும் பலன்கள் பற்றி பார்ப்போம்.
பொதுவாகவே, அரசமரத்தை சுற்றி வருவது நன்மை உண்டாக்குகிறது, அதாவது அறிவியல் ரீதியாக அரச மரம் அதிகமான ஆக்சிஜனை வெளியிடக் கூடியது என்பதால் இதனை வலம் வருவது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
மேலும், அமாவாசை மகத்துவம் சிறப்புவாய்ந்தது. அதிலும் திங்கள் அன்று வரும் அமாவாசையில் அமாவாசையில் சிவ பஞ்சாட்சரம் நமசிவாய என்று 108 முறை சொல்லி அரசமரம் சுற்றி வந்தால் நாம் நினைத்தது நடப்பது மற்றும் நம் வாக்குவன்மை அதிகரிக்கும் என்கின்றனர்.
அடுத்தபடியாக நாம் எத்தனை முறை அரசமரத்தை வலம் வருகின்றோமோ, அதற்கு தனித்தனியே பலன்கள் இருக்கின்றன.
அதே போல் எந்த கிழமையில் விரதம் இருந்து அரச மரத்தை வலம் வந்தால் என்ன பலன் கிடைக்கும் என பார்ப்போம்.
அரச மரத்தை ஞாயிற்றுக்கிழமையில் விரதம் இருந்து வலம் வந்தால் தீராத நோய்களும் தீரும்.
திங்கட்கிழமை அன்று விரதம் இருந்து வலம் வந்தால் மங்கல காரியங்கள் தடையின்றி நிகழும், அமாவாசை திதியும் திங்கட்கிழமையும் சேர்ந்து வரும் இந்நாளில் விரதம் இருந்து அரச மரத்தை வழிபட்டு வலம் வருதல் இன்னும் சிறப்பாகும்.
செவ்வாய்க்கிழமையில் விரதம் இருந்து வலம் வந்தால், செவ்வாய் தோஷம் மற்றும் நவக்கிரக தோஷங்கள் விலகுகின்றது.
புதன்கிழமையில் விரதம் இருந்து அரசமரத்தை வலம் வந்தால், வியாபாரம் பெருகும்.
வியாழக்கிழமையில் விரதம் இருந்து வலம் வந்தால், கல்வியில் சிறந்து விளங்கலாம்.
வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து அரசமரத்தை வலம் வந்தால், சகல சவுபாக்கியங்களும் கிடைக்கப் பெறலாம்.
சனிக்கிழமையில் விரதம் இருந்து வலம் வந்து வணங்கினால், வறுமை நீங்கி மகாலட்சுமியின் பேரருளைப் பெறலாம்.
எத்தனை முறை அரசமரத்தை வலம் வருகிறோமோ, அதற்கு தனித்தனியே பலன்கள் இருக்கின்றன.
மூன்று முறை வலம் வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும். ஐந்து முறை வலம் வந்தால் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும்.
ஒன்பது முறை வலம் வந்தால் புத்திர பாக்கியம் கிடைத்து, வம்சம் விருத்தியாகும். பதினொரு முறை வலம் வந்தால் சகல பாக்கியங்களும் வந்துசேரும். கடன் தொல்லையில் இருந்து மீளலாம்.
நூற்றியெட்டு முறை வலம் வந்தால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
ஆகையால் வேண்டுதல் இல்லையென்றாலும் அரசமரத்தை சுற்றி வர நம் உடல்நலம் மற்றும் ஆன்மீக பலம் அதிகரித்து வாழ்க்கையில் நலம் பெறுவோம்.