அமாவாசைக்கும் பசுவிற்கு என்ன தொடர்பு.. பின்னால் இருக்கக்கூடிய ரகசியம் என்ன?

By Sakthi Raj Oct 23, 2026 07:34 AM GMT
Report

பொதுவாக, நம்முடைய ஆன்மீகத்தில் பசுவை நாம் மகாலட்சுமி அம்சமாக போற்றி வழிபாடு செய்கின்றோம். அந்த வகையில், அமாவாசை நாட்களில் பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பது என்பது நமக்கு பெரிய அளவில் புண்ணியத்தை சேர்க்கிறது.

இந்து சமய மரபில் பசு மகாலட்சுமியின் அம்சமாக போற்றப்படுவதால் நாம் பசுவிற்கு உணவளிப்பது செல்வம், நன்மை மற்றும் குடும்பத்தில் அமைதி என்று பல விஷயங்களை நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம்.

குறிப்பாக பசுவிற்கு பதினாறு அகத்திக்கீரை நாம் வழங்கும் பொழுது நாம் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் ஏதேனும் தவறி இருந்தாலும் , அதோடு அதனால் ஏற்பட்ட பாவங்கள் முதல் தோஷம் விலகுகிறது என்று சொல்லப்படுகிறது.

அமாவாசைக்கும் பசுவிற்கு என்ன தொடர்பு.. பின்னால் இருக்கக்கூடிய ரகசியம் என்ன? | Amavasya And Cows The Hidden Spiritual Connection

பசுவிற்கு அகத்திக்கீரை கொடுக்கின்ற பொழுது நம்முடைய வீடுகளில் சுப காரிய நிகழ்ச்சிகள் விரைவில் தடையின்றி நடைபெறும். மேலும், பசுவை வலம் வந்து வழிபாடு செய்கின்ற பொழுது முப்பெரும் தெய்வங்களை வழிபாடு செய்த புண்ணியம் கிடைக்கிறது.

அதனால் அமாவாசை நாளில் நாம் பசுவிற்கு அகத்திக்கீரை வழங்கி முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்கின்ற பொழுது நமக்கு ஆன்மீக ரீதியாக முன்னேற்றமும் வாழ்க்கையில் தடைகளும் தோஷமும் விலகுகிறது.    

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US