தடை பட்ட காரியங்கள் நடக்கச்செய்யும் லலிதாம்பிகை வழிபாடு

By Sakthi Raj Oct 02, 2024 10:35 AM GMT
Report

அம்பிகை எப்பொழுதும் வழிபாட்டில் மிக சக்தி வாய்ந்தவள்.ஒருவர் அம்பிகை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்ய நினைத்த காரியம் அம்பாள் நடத்தி காட்டுவாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.அப்படியாக அம்பிகை லலிதாம்பிகையை மனதார வழிபட்டால் இதுவரை வீட்டில் தடைபட்டிருந்த மங்கலகாரியங்களை  நடத்தி அருள்கிறாள்.

சிலருடைய வீட்டில் காரணமே இன்றி என்ன காரியங்கள் மேற்கொண்டாலும் தடங்கல் ஏற்படுவதை பார்க்கமுடியும்.அப்படியானவர்கள் கட்டாயம் லலிதாம்பிகை வழிபாட்டை மேற்கொள்ள வீட்டில் நல்லதொரு மாற்றம் ஏற்படும்.

தடை பட்ட காரியங்கள் நடக்கச்செய்யும் லலிதாம்பிகை வழிபாடு | Ambal Vazhipadu

மேலும் வீட்டில் உள்ள கணவன் மனைவி இடையே ஒற்றுமையையும் அன்பையும் பலப்படுத்தி அருள்கிறாள் லலிதாம்பிகை. லலிதாம்பிகையை எவரொருவர்வாழ்க்கையில் கெட்டியாக பிடித்துக கொண்டு அவளின் திருவடிகளை சரண்டைந்து வருகிறார்களோ அவர்களின் அனைத்து குறைகளையும் தீர்த்து சகல சௌபாக்கியங்களையும் அருளிச்செய்கிறாள் அம்பிகை.

நவராத்திரி தாம்பூலத்தில் என்ன பொருட்களை வைக்க வேண்டும்

நவராத்திரி தாம்பூலத்தில் என்ன பொருட்களை வைக்க வேண்டும்


மேலும் நாம் வீட்டில் லலிதாம்பிகை மனதார வழிபட்டு பூஜை செய்து இந்த மந்திரம் சொல்லி வர எல்லா மங்கள காரியமும் தடையின்றி நடத்தி அருள்வாள்.

"ஓம் லலிதாம்பிகாய நமக"

தடை பட்ட காரியங்கள் நடக்கச்செய்யும் லலிதாம்பிகை வழிபாடு | Ambal Vazhipadu 

இந்த மந்திரத்தை தினமும் சொல்லலாம் இல்லை வெள்ளிக்கிழமைகளில் காலையும் மாலையும் சொல்லி விளக்கு ஏற்ற வேண்டும்.மேலும் இந்த மந்திரத்தை 108 முறை சொல்லி வேண்ட சகலசெளபாக்கியங்களையும் அம்பாள் அருள்வாள்.

இதை கோயிலில் விளக்கேற்றியும் சொல்லிவரலாம். பெண்கள் இந்த மந்திரத்தை சொல்ல சொல்ல பிரிந்த கணவன் விரைவில் மனம் மாறி வந்து சேருவார்.

குடும்பத்தில் இதுவரை இருந்த அழுகையும் கவலையும் துடைக்கப்படும்.இல்லத்தில் இருந்த துன்ப நிலையை மாற்றி அருள்வாள் லலிதாம்பிகை்கை.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US