சித்திரை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்
அமாவாசை என்பது முன்னோர்கள் வழிபாட்டிற்குரிய நாளாக சொல்லப்பட்டுள்ளது.
இந்த நாளில் விரதம் இருந்து பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, தான தர்மம் வழங்குவதால் பித்ருக்களின் ஆசி கிடைக்கும்.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் ஸ்ரீராமர், சீதை, அனுமன் வழிபட்ட சிவாலயமாகும்.
இந்துக்களின் தீர்த்த மூர்த்தி ஸ்தலமாக விளங்கும் இங்கு அமாவாசை நாட்களில் பக்தர்கள் மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபடுவது வழக்கம்.
இன்று சித்திரை மாத சர்வ அமாவாசையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த கடலில் நீராடி முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
இதன் பின்னர் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று கோவிலுக்குள் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீராடி ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |