திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன் தெரியுமா?
திருமணத்தை ஆயிரம் காலத்துப் பயிர் என்று பழங்காலத்திலிருந்து முன்னோர்களால் குறிப்பிட்டனர்.
தமிழ் பாரம்பரியபடி திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் மரபு உண்டு.
அருந்ததி நட்சத்திரம் என்பது சாதாரண கண்களுக்கு ஒரு நட்சத்திரம் போல் காட்சியளிக்கிறது.
ஆனால் அதையே நுண்ணோக்கு கருவியால் கண்டால் இரு நட்சத்திரம் போல் காட்சி அளிக்கும். இதை இரு உடல் ஒரு உயிர் என்பார்கள்.
அதாவது கணவன், மனைவி இருவரும் இரு உடலாக இருந்தாலும் ஒரு உயிராக ஒற்றுமையுடனும், 16 செல்வங்களையும் பெற்று பெறுவாழ்வு வாழ வேண்டும் என்பதே இதன் பொருள் ஆகும்.
திருமணம் செய்த தம்பதியர்கள் விருந்து ஒன்பால், அதாவது விருந்து உபசரித்தல் செய்தால் தான் திருமணத்தின் சிறப்பு ஆகும்.
அனைவருக்கும் விருந்து உபசரித்தல் செய்து அவர்களிடம் நல்லாசி பெற வேண்டும் என்பதுதான் திருமண தர்மம் கூறுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |