மனம் விரும்பியபடி வாழ்க்கை துணை அமைய செய்யவேண்டியவை
வாழ்க்கையில் பிறந்தோம் படித்தோம் வேலை பார்த்தோம் என்ற படிக்கட்டுகள் தாண்டி முக்கியமான படியாக திருமணம் என்னும் படிக்கட்டில் ஏறி நிற்கும் பொழுது தான் பூமி உண்மையில் சுற்றுவது புரியும்.அதாவது தலை சுற்றி போய்விடும்.
மனம் விரும்பியபடி மணமகன் ,மணமகள் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரமே என்றாலும்,அந்த துணை நம்மை வந்து விதி சேர்க்கவே பல தோஷங்கள் ஜாதகத்தில் ஒலித்துவைத்திருக்கும்.
எங்கும் எதிலும் தடங்கல் என்று இருக்கும் வேளையில்,அகிலம் போற்றும் பெருமாளையே திருப்பாவை பாடி மாலை சூட்டிய ஆண்டாளின் திருவடிகள் பற்றி விடவேண்டும்.
கிருஷ்ணரை தன் கணவர் ஆக்கி கொள்ள வேண்டும் என்று நினைத்தாள் ஆண்டாள். தான் இருந்த இடத்தை ஆயர்பாடி ஆகவும் தன்னை கோபிகையாகவும் பாவித்து நோன்பு நோற்றாள்.
அதன்படி மார்கழியில் அதிகாலையில் எழுந்து கிருஷ்ணரை பாடி அருள் பெற தன் தோழியர்களை அழைத்து,மார்கழி மாதம் 30 நாட்களும் பாட திருப்பாவையில் உள்ள 30 பாடல்கள் பாடினாள்.
அதிகாலையில் எழுந்து நீராடி பாவை செய்து விளக்கேற்றி வழிபட்டு,நெய் பால் முதலியவற்றை தவிர்த்து கண்களுக்கு மையிடாமல் மலர் சூடி கூந்தல் முடியாமல் கிருஷ்ணரின் பெருமைகளை தவிர வேற எந்த புறம் பேசாமல் ஆகிய நோன்பு முறைகளை மேற்கொண்டனர்.
மேலும் இப்படி நோன்பு இருந்து பெருமாளை அடைந்தாள் ஆண்டாள்.
அப்படியாக தனக்கு விரும்பிய கணவன் மனைவி அமைய தினம் ஒரு பாசுரம் திருப்பாவையில் இருந்த பெருமாளையும் ஆண்டாளையும் நினைத்து முப்பது நாள் பாட நாம் விரும்பியபடி வாழ்க்கை அமையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |