மஹா சிவராத்திரி.., கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்ட மூதாட்டி

By Yashini Feb 16, 2026 09:52 AM GMT
Report

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

93 வயதான முத்தம்மாள் தொடர்ந்து 64வது ஆண்டாக கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்டு அம்மனுக்கு படைத்தார்.

இந்த வழக்கம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

மஹா சிவராத்திரி.., கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்ட மூதாட்டி | Old Woman Bakes Appam By Hand In Boiling Ghee

மஹா சிவராத்திரியை முன்னிட்டு 48 நாட்கள் விரதமிருந்து, அம்மனுக்கு சாத்தியப்பட்ட புடவையை அணிந்து அவர் இந்த செயலை செய்தார்.

சுடப்பட்ட அப்பம் அம்மனுக்கு படைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

நெய்யால் பக்தர்களின் நெற்றியில் திலகமிட்டு முத்தம்மாள் ஆசி வழங்கினார்.

இந்த விழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.  


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US