கோபத்தை வரம் கேட்கும் சில மனிதர்கள்

By Sakthi Raj Jun 22, 2024 02:00 PM GMT
Report

மனிதன் வாழ நிறைய நற்பண்புகள் இருக்க வேண்டும்.அதிலும் மனிதனிடம் இருக்கவே கூடாது என்ற பண்புகளில் கோபம் முதல் இடம் பிடிக்கிறது.

இந்த கோபம் ஒரு மனிதனை கொன்று விடும்.ஒரு கோபம் ஒரு மனிதனின் விதியை கூட மாற்றிவிட முடியும்.அப்படியாக நமக்கு கோபம் அறவே இருக்க கூடாது என்று பல தியானம் செய்வது உண்டு.

இறைவனிடம் எனக்கு கோபத்தை கட்டுப்படுத்த வழி சொல்லுங்கள் என்று கதறுவது உண்டு.ஆனால் இங்கு இதற்கு நேர்மாறாக எனக்கு கோபத்தை வரம் கொடு என்று சிலர் வேண்டுகின்றனர் அதை பற்றி பார்ப்போம்.

கோபத்தை வரம் கேட்கும் சில மனிதர்கள் | Aneemga Thagaval Spiritual Thoughts Bakthi News

ரிக்வேதத்தில் கோபத்தை புகழ்கிறது.கோபத்தையே ஒரு தேவதையாக்கி இரு சூக்த மந்திரங்கள் இதில் உள்ளன. முதல் சூக்தத்தில், ' மிகுந்த பலசாலியான கோபமே. இங்கு வருவாயாக. நண்பனுக்காகத் தவத்தினால் எங்களுடைய எதிரிகளை விரட்டி விடுவாயாக.

எதிரிகளையும், அரக்கர்களையும் கொல்லும் கோபமே. எங்களுக்கு எல்லாச் செல்வங்களையும் கொண்டு வரவேண்டும்' என்கிறது. மற்றொன்று ' தீயைப் போல ஜொலிக்கும் உன்னை எங்களுடைய படைத்தலைவனாக இருக்கும்படி அழைக்கிறோம். எங்கள் எதிரிகளை வீழ்த்த வேண்டும்.

வீட்டில் எந்தெந்த தெய்வங்களை வைத்து வணங்கலாம்

வீட்டில் எந்தெந்த தெய்வங்களை வைத்து வணங்கலாம்


அவர்களுடைய செல்வங்களை எல்லாருக்கும் பகிர்ந்து கொடுப்பாயாக' என கோபத்தைப் புகழ்கிறது. நல்ல விஷயத்திற்காக கோபப்படுவதில் தவறில்லை.

இதையே மகாகவி பாரதியாரும் 'ரெளத்திரம் பழகு' எனச் சொல்லியிருக்கிறார்.

ஒரு புறம் பார்த்தால் கோபம் கூட சில இடங்களில் நியாயம் ஆகிவிடுகிறது.அதையும் நாம் இறைவனிடம் கேட்பது தவிறில்லை போல்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US