வீட்டில் அன்னபூரணி சிலையை வைத்து வழிபட சரியான முறை
அன்னபூரணி சிலையை நீங்கள் பூஜை அறையில் வைத்திருந்தாலும் சரி, சமையல் அறையில் வைத்திருந்தாலும் சரி, அன்னபூரணியை எப்போதும் பச்சரிசியின் மேல் அல்லது பச்சரிசி நெல்லின் மேல் அமர வைப்பது ரொம்ப நல்லது.
ஒரு பித்தளை கிண்ணம், பித்தளை டம்ளர் எதுவாக இருந்தாலும் அது நிரம்ப பச்சரிசி அல்லது நெல் கொட்டி அதன் உள்ளே அன்னபூரணியின் சிலையை அமர வைக்க வேண்டும்.
அன்னபூரணியின் சிலை அரை இன்சோ, ஒரு இஞ்சோ அந்த நெல்லில் புதைந்திருக்கும் படி வைக்க வேண்டும்.
இந்த பச்சரிசியில் நான்கு துவரம் பருப்பு, 2 ஏலக்காய், 2 கிராம்பு, போட்டு வைப்பது மிக மிக சிறப்பு.முடிந்தால் இதில் ஒரு வெள்ளி நாணயம் வைக்கலாம். இல்லை என்றால் ஒரு ரூபாய் நாணயத்தை வையுங்கள்.
அன்னபூரணியின் சிலை இருந்தால் தினமும் உங்களுடைய வீட்டில் சமைத்த பிறகு, நீங்கள் சமைத்த உணவை இந்த அன்னபூரணி தாயின் சிலைக்கு நெய்வேதியமாக வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.அதுதான் சரியான முறை.
கூடவே ஒரு டம்ளரில் சுத்தமான தண்ணீரை வைத்து வணங்க வேண்டும். இப்படி முறையாக அன்னபூரணி தாயை எவர் வீட்டில் வழிபாடு செய்து வருகிறார்களோ அவர்களுடைய வீட்டில் சாப்பாட்டுக்கு பிரச்சனையே இருக்காது.
சமைத்த சாப்பாடு வீணாகாது. வீட்டில் இருப்பவர்கள் நோய் வாய்வு பட்டு, அந்த சாப்பாட்டை கை வைக்க முடியவில்லை என்ற தரித்திரம் ஒருபோதும் பிடிக்காது.
வீட்டில் இருப்பவர்கள் ஆரோக்கியமாக எல்லா உணவையும் சாப்பிடும் அளவிற்கு ஒரு சூழ்நிலையை அந்த அன்னபூரணி தாய் நிச்சயம் ஏற்படுத்திக் கொடுப்பாள்.
அன்ன தோஷம், அன்ன தரித்திரம் விலக இந்த அன்னபூரணி தாயை மேல் சொன்ன முறைப்படி வழிபாடு செய்து வாருங்கள்.
நிச்சயம் குடும்பம் சந்தோஷமாக இருக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |