இன்று வீட்டில் அன்னாபிஷேகம் செய்ய நல்ல நேரம்
கர்மவினைகளை தீர்த்து உலகில் பிறந்த உயிரிகளுக்கு வாழ்க்கை பாடத்தை கற்று கொடுப்பவர் சிவபெருமான்.அப்படியாக அவருக்கு ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம் நடைபெறும்.அதை பார்ப்பதற்கு நாம் கொடுத்து வைக்க வேண்டும் என்று தான் சொல்ல வேண்டும்.
எவர் ஒருவர் தங்கள் வாழ்நாளில் சிவபெருமானுக்கு நடைபெறும் அன்னாபிஷேகத்தை பார்க்கிறார்களோ அவர்களுக்கு கோடி புண்ணியம் சேரும் என்பது நம்பிக்கை. எவ்வளவு சிறப்பான நாளில் நாம் கோயிலுக்கு சென்று அன்னாபிஷேகம் காண்பது தான் சிறப்பு.
ஆனால் கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே இந்த அபிஷேகம் செய்யலாம்.அவ்வாறு வீட்டில் பூஜை செய்து வழிபாடு செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள் வீட்டில் இருக்கும் கருங்கல், வெள்ளி, பித்தளை, செம்பு, ஸ்படிகம் போன்ற பொருட்களால் ஆன லிங்கத்திற்கு மட்டுமே அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.
மற்ற பொருட்களால் செய்யப்பட்ட சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபடக் கூடாது. வீட்டில் இருக்கும் சிவலிங்கத்திற்கு சுத்தமான தண்ணீர், பால், தயிர், பன்னீர், விபூதி, சந்தனம், இளநீர் என எந்த பொருட்கள் உள்ளதோ அவற்றைக் கொண்டு அபிஷேகம் செய்த பிறகே அன்னத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும்.
இந்த ஆண்டு ஐப்பசி பெளர்ணமி அன்னாபிஷேகம் நவம்பர் 15ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது.அதனால் அன்றைய தினத்தில் அபிஷேகம் செய்து வழிபாடு செய்ய மூன்று நல்ல நேரங்கள் இருக்கிறது.அதில் எந்த நேரம் நமக்கு சாத்தியமோ அதில் நாம் அபிஷேகம் செய்யலாம்.
அதாவது காலை 6 மணி முதல் 10.20 வரை பகல் 12.10 மணி முதல் 01.10 மணி வரை மாலை 04.35 மணி முதல் 6 மணி வரை.
அபிஷேகம் செய்யும் முறை
முதலில் வீட்டில் இருக்கும் சிவலிங்கத்தை ஒரு தட்டு அல்லது வாழை இலையில் வைக்க வேண்டும். லிங்கத்தின் அளவிற்கு ஏற்றாற் போல் பச்சரியால் சாதம் வடித்து, ஆற வைத்து, பிறகு லிங்கத்தின் திருமேனியின் மீது முழுவதுமாக அன்னத்தால் போர்த்த வேண்டும். மேலிருந்து கீழாக அன்னத்தை சிவலிங்கத்தின் அனைத்து பகுதிகளும் மூழ்கும் படி போர்த்த வேண்டும்.
பிறகு மீதம் இருக்கும் அன்னத்தை கைகளால் எடுத்து லிங்கத்தின் மீது போட்டு அபிஷேகம் செய்ய வேண்டும். அதோடு காய்கறி, பழங்கள், இனிப்பு வகைகள் என எந்த உணவுப் பொருளாக இருந்தாலும் அதை சிவனுக்கு நைவேத்தியமாக படைத்து வழிபடலாம்.
பிறகு அன்னாபிஷேகம் செய்த பிறகு நாம் சிவபுராணம் படிப்பது சிறந்த பலனை தரும். அதே போல் சிவனின் அஷ்டோத்திரம், லிங்க அஷ்டோத்திரம் சொல்லி வழிபடலாம். இல்லை சிவனின் நாமம் "ஓம் நவசிவாய" என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை 108 முறை சொல்லி வழிபடுவது சிறப்பு.
இவ்வாறு வழிபாடு செய்ய அந்த அகிலம் ஆளும் ஈசனின் பரிபூர்ண அருள் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |