தீராத கடன் பிரச்சனையா? குபேரர் அருளை பெற ஏற்ற வேண்டிய தீபம்
இறைவழிபாடு என்பது நம்முடைய மனதை செம்மையாக்க கூடிய ஒன்றாகும். அதனால், தான் முன்னோர்கள் "கோவில் இல்லாத ஊர்களில் குடியிருக்க வேண்டாம்" என்று சொல்லி இருக்கிறார். எவ்வாறு இறை வழிபாடு அவசியமாக இருக்கிறதோ அதை போல் விளக்கேற்றி வழிபாடு செய்வதும் அவசியமாக உள்ளது.
அதிலும் விளக்கேற்றி வழிபாடு செய்வதற்கு என்று உரிய எண்ணெய் இருக்கிறது. இதற்கு முன்னோர்கள் பழமொழி சொல்லுவார்கள். அதாவது, இலுப்பை எண்ணெய் இல்லாத வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் இருக்காது என்று.
அப்படியாக, தீராத கடன் பிரச்சனை இருக்கிறது என்றால் அவர்கள் இந்த ஒரு விளக்கை ஏற்றி வழிபாடு செய்தால் போதும் அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் விடுபடலாம். அதை பற்றி பார்ப்போம். நம்முடைய ஆன்மீக சாஸ்திரத்தில் வடக்கு திசை என்பது குபேர அருளை பெற்று கொடுக்கக்கூடிய திசையாக இருக்கிறது.

இந்த வடக்கு திசையில் இலுப்பை எண்ணெய் ஏற்றி வழிபாடு செய்யும்பொழுது குபேரருடைய முழு அருளை பெற்று நம் வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய பண பிரச்சனைகளில் இருந்து விடுபடுகின்றோம். அதேபோல் வீடுகளில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல் மற்றும் கண் திருஷ்டி போன்றவையும் விலகுகிறது.
பஞ்ச தீப எண்ணெய்:
வீடுகளில் ஏற்றக்கூடிய பஞ்ச தீப எண்ணெய்களில் இந்த இலுப்பை எண்ணெய் மிகவும் முக்கிய பங்கு கொள்கிறது. இந்த இலுப்பை எண்ணெய் ஏற்றி வழிபாடு செய்வதால் சகல ஐஸ்வர்யங்களையும் நமக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அதனால், உங்களுடைய கடன் விரைவில் அடையவும், கொடுத்த கடனை மீண்டும் பெறவும் இந்த தீபத்தை பிரம்ம முகூர்த்த நேரத்தில் அல்லது மாலை 6 மணி நேரத்தில் ஏற்றுவது நல்ல பலன் கொடுக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |