இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (24/04/2024)

Daily Rasi Palan Tamil
By Sakthi Raj Apr 24, 2024 04:05 AM GMT
Sakthi Raj

Sakthi Raj

Report

மேஷம் முதல் மீனம் வரையிலான இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் குறித்து தெரிந்து கொள்வோம்

மேஷம்

நீண்டநாள் முயற்சி நிறைவேறும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். கூட்டுத் தொழிலில் ஆதாயம் காண்பீர்கள். வியாபாரத்தில் இருந்த சங்கடம் விலகும். பெரியோர் ஆதரவால் உங்கள் விருப்பம் நிறைவேறும்.

ரிஷபம்

உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும். தொழிலில் போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள்.நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்சினை முடிவிற்கு வரும்.

மிதுனம்

வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட சிக்கல்களை பேசித்தீர்ப்பீர்கள். பணியாளர்கள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். வீடுதேடி வருவோர்க்கு உதவி செய்வீர்கள்.முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.

கடகம்

உங்கள் செயல்களில் சில தடைகள் ஏற்படும். உதவி புரிவதாக சொன்னவர்கள் விலகிச் செல்வார்கள்.உடலில் சோர்வு தோன்றும். கடும் போராட்டத்திற்குபின் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.தொழிலில் போட்டியை சந்திப்பீர்கள் என்றாலும் உங்கள் அணுகுமுறையால் ஆதாயம் உண்டாகும்.

நிறைமாத கர்ப்பிணியாக காட்சி தரும் அங்காள பரமேஸ்வரி அம்மன்

நிறைமாத கர்ப்பிணியாக காட்சி தரும் அங்காள பரமேஸ்வரி அம்மன்


சிம்மம்

துணிச்சலுடன் செயல்பட்டு உங்கள் செயலில் லாபம் காண்பீர்கள். எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும்.  விமர்சனங்களை ஒதுக்கி வைத்து செயல்படுவீர்கள். சகோதரர்களால் ஆதாயம் காண்பீர்கள். மற்றவரால் செய்ய முடியாத ஒரு செயலை செய்வீர்கள். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

கன்னி

குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். செலவுகள் கட்டுப்படும். நிதிநிலை உயரும். எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். சேமிப்பு உயரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

துலாம்

மனதில் வீண் குழப்பம் உண்டாகும். உங்கள் கவனக்குறைவால் ஒரு முயற்சி நிறைவேறாமல் போகும் செயல்களில் தடுமாற்றம் அடைவீர்கள். எதிர்பார்த்த ஒன்றில் தாமதம் ஏற்படும். விலகிச் சென்ற உறவினர்கள் உங்களைத் தேடிவந்து சமாதானம் பேசுவார்கள்.

விருச்சிகம்

திடீர் செலவுகளால் சங்கடம் அடைவீர்கள். உங்கள் முயற்சியில் தடையும் தாமதமும் ஏற்படும். உழைப்பின் வழியே உங்கள் செயல்களில் சாதகமான நிலையைக் காண்பீர்கள். அலைச்சல் அதிகரிக்கும். வாகன வகையில் செலவு உண்டாகும். கவனமுடன் செயல்படுவோர்க்கு சங்கடங்கள் குறையும்.

தனுசு

உங்கள் எதிர்பார்ப்புகள் இன்று எளிதாக நிறைவேறும். வரவேண்டிய பணம் வீடு தேடி வரும். முயற்சியில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். குடும்பத்தினர் ஒத்துழைப்புடன் ஒரு செயல் நிறைவேறும்.எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும்.

மகரம்

பங்கு வர்த்தகத்தில் லாபம் காண்பீர்கள். நண்பர்கள் வழியே எதிர்பார்த்த தகவல் வரும். தொழிலை விரிவு செய்வதற்காக எதிர்பார்த்த தொகை கைக்கு வந்துசேரும். உங்கள் எதிர்பார்ப்பு இன்று நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும்.

கும்பம்

தடைபட்டிருந்த முயற்சி இன்று நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை ஏற்படும். செயல்களில் சிரமம் ஏற்பட்டாலும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். குடும்ப பிரச்னை தீரும்.நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். தடைபட்டிருந்த பணம் வரும்.

மீனம்

சந்திராஷ்டமம் தொடர்வதால் மனதில் தேவையற்ற சங்கடம் தோன்றும். செயல்கள் தாமதமாகும்.வழக்கமான பணிகளிலும் கவனமுடன் செயல்படுவது நன்மையாகும். பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.மனதில் குழப்பம் அதிகரிக்கும். கவனக் குறைவால் சில சங்கடங்களை சந்திப்பீர்கள்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US