இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?(30/04/2024)

Daily Rasi Palan Tamil
By Sakthi Raj Apr 30, 2024 03:48 AM GMT
Sakthi Raj

Sakthi Raj

Report

மேஷம்

வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். இழுபறியாக இருந்த வேலைகள் நிறைவேறும். முயற்சிகள் வெற்றியாகும். தொழிலில் உங்கள் அணுகுமுறை லாபத்தை ஏற்படுத்தும். மக்கள் சேவையில் அக்கறை செலுத்துவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். வருமானம் கூடும்.

ரிஷபம்

பண வரவில் இருந்த தடைகள் விலகும். பயணத்தில் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீங்கள் திட்டமிட்ட வேலைகள் வெற்றியாகும். பண நெருக்கடி விலகும். நேற்றைய சங்கடம் நீங்கும்.

மிதுனம்

திடீர் வேலைகளால் அலைச்சல் கூடும். யோசித்து செயல்படுவதால் சங்கடம் இல்லாமல் போகும்.பணியிடத்தில் சில சங்கடங்கள் தோன்றும். மனதில் தேவையற்ற சிந்தனைகள் உண்டாகும். திட்டமிட்டு செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். வருமானத்தில் இருந்த தடை விலகும்.

கடகம்

பிரச்னைகளை முறியடித்து நினைத்ததை சாதிப்பீர்கள். நவீனப் பொருட்களின் சேர்க்கை உண்டாகும். பொருளாதார நெருக்கடி விலகும். எதிர்பார்த்த தொகை வந்துசேரும்.வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட வருத்தம் நீங்கும். பெரியோர் ஆலோசனையைக் கேட்டு செயல்படுவீர்கள்.

சிம்மம்

உடல்நிலையில் தோன்றிய சங்கடம் நீங்கும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும். பகைவர்களின் தொல்லை நீங்கும்.நண்பர்கள் ஒத்துழைப்பால் உங்கள் எண்ணம் நிறைவேறும். அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.

கன்னி

உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகி வளர்ச்சி கூடும். பணியாளர் ஒத்துழைப்பார்கள்.நண்பர்கள் துணையுடன் குடும்ப பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். பெரியோர் ஆதரவு நன்மை தரும்.

குபேரன் அருள் கிடைக்க அலமாரியை எப்படி வைத்திருக்க வேண்டும்?

குபேரன் அருள் கிடைக்க அலமாரியை எப்படி வைத்திருக்க வேண்டும்?


துலாம்

வேலையின் காரணமாக அலைச்சல் அதிகரிக்கும். நிதானமுடன் செயல்படுவது நன்மையாகும்.அரசு வழியிலான முயற்சிகள் தள்ளிப்போகும். குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் போவார்கள்.அறிமுகம் இல்லாதவர்களை நம்பி எந்தவொரு செயலிலும் இன்று ஈடுபட வேண்டாம்.

விருச்சிகம்

பயணத்தால் நன்மை உண்டாகும். இழுபறியாக இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாகும்.கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிரிகள் உங்களை சரண் அடைவார்கள். குடும்ப நலனுக்காக மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள்.

தனுசு

அரசு வழி முயற்சி வெற்றியாகும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். பணியிடத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் இருந்த மனஸ்தாபம் விலகும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.

மகரம்

உறவினர்களால் சில நெருக்கடிகளுக்கு ஆளாவீர்கள். மனதில் தேவையற்ற குழப்பம் அதிகரிக்கும். உங்கள் அணுகுமுறையால் நன்மை அடைவீர்கள். வியாபாரம் விருத்தியாகும்.நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வந்து சேரும். உங்கள் முயற்சி வெற்றியாகும்.

கும்பம்

குடும்பத்தில் நெருக்கடி அதிகரிக்கும். வரவு செலவில் எச்சரிக்கை அவசியம்.வாகனத்தை சரி செய்வீர்கள். வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த நன்மை ஏற்படாமல் போகும். வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும். வரவு இழுபறியாகும்.

மீனம்

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும்.அலுவலகத்தில் சுமூகமான சூழல் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்துசேரும். கேட்ட இடத்தில் இருந்து பணம் வந்துசேரும். அரசு வழி முயற்சியில் ஆதாயம் அடைவீர்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 


+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US