இன்றைய ராசி பலன்(04-04-2025)
மேஷம்:
இன்று உடல் நிலையில் சில சங்கடங்கள் தோன்றும். ஒரு சிலருக்கு வெளியூருக்கு செல்லும் வாய்ப்புகள் உருவாகலாம். எதையும் யோசித்து செயல்படுவதால் வெற்றி அடைவீர்கள்.
ரிஷபம்:
மனதில் மகிழ்ச்சி உண்டாகும். சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிகம் வருகை தருவார்கள். உடல் நிலையில் உள்ள பாதிப்பு விலகும்.
மிதுனம்:
கடந்த கால நினைவுகள் மனதை சங்கடத்திற்கு ஆளாக்கலாம். சிறு வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தந்தை வழி உறவால் ஆதரவு கிடைக்கும்.
கடகம்:
இன்று நீங்கள் நினைப்பது ஒன்றும் நடப்பதும் ஒன்று வேறாக இருக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். ஒரு சிலருக்கு வெளியூர் செல்ல நேரிடலாம். வேலை பளு அதிகரிக்கும்.
சிம்மம்:
வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் ஆதாயமாகும். திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காண்பீர். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.
கன்னி:
உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ் கிடைக்கும். சகோதரன் வழி உறவால் ஆதாயம் கிடைக்கும். உங்கள் முயற்சியால் முன்னேற்றம் காண்பீர். அந்நியர்கள் உதவியால் விருப்பம் நிறைவேறும்.
துலாம்:
மனதில் இறை சிந்தனை அதிகரிக்கும். உணவு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தோடு மகிழ்ச்சியான நேரம் செலவிடுவீர்கள். நினைத்ததை சாதிப்பீர்கள்.
விருச்சிகம்:
ஒவ்வொரு வேலையிலும் விழிப்புடன் செயல்படுவது அவசியம். தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும். வேலைகளில் எதிர்பாராத சங்கடம் உண்டாகும். எதிர்பார்ப்பு இழுபறியாகும்.
தனுசு:
வெளியூர் பயணம் உங்களுக்கு ஆதாயமாக அமையும். பிள்ளைகள் நலனில் முழுமையான அக்கறை செலுத்துவீர்கள். கூட்டுத்தொழில் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த பணம் வரும்.
மகரம்:
போட்டியாளர்களால் ஏற்பட்ட சங்கடம் காணாமல் போகும். வெளியூர் பயணம் ஆதயம் தரும். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். அக்கம் பக்கத்தினரின் ஆதரவு கூடும்.
கும்பம்:
பணியிடத்தில் சிறு பிரச்னைகள் தோன்றும். சாதுரியமாக செயல்பட்டு அதற்கு தீர்வு காண்பீர். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை மீண்டும் தோன்றும். உறவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்.
மீனம்:
தாய் வழி உறவால் நல்ல ஆதரவு கிடைக்கும். உடல் அசதி தோன்றும். சிலருக்கு வெகு நாள் ஆசை நிறைவேறும். சொந்தங்கள் வருகையால் உங்களுக்கு நன்மைகள் நடக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |