இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (19/04/2024)

By Sakthi Raj Apr 19, 2024 03:36 AM GMT
Report
மேஷம் முதல் மீனம் வரையிலான இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் குறித்து தெரிந்து கொள்வோம்

மேஷம்

பணவரவில் ஏற்பட்ட தடைகள் விலகும்.உங்கள் முயற்சி வெற்றிகரமாகும் .நேற்றைய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகி குடும்பத்தினர் உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த தகவல் உங்களை இன்று வந்து சேரும்.

ரிஷபம்

செயல்களில் ஆதாயம் தோன்றும் .குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும் சுறுசுறுப்பாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள்.நீண்ட நாள் பிரச்சனை முடிவிற்கு வரும்.வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

மிதுனம்

மற்றவர்களால் செய்ய முடியாத ஒரு செயலை நீங்கள் செய்து முடிப்பீர்கள். நீண்ட நாள் முயற்சி இன்று நடந்தேறும் .நண்பர்கள் உங்கள் செயல்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நீங்கள் மேற்கொண்டு முயற்சிகள் ஆதாயம் தரும் .அரசியல்வாதிகளில் எண்ணம் நிறைவேறும்.

கடகம்

உங்கள் பேச்சாற்றலால் ஒரு செயலில் வெற்றி காண்பீர்கள். சமூகத்தில் உங்கள் புகழ் உயரும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும் .விஐபிகள் ஆதரவால் முயற்சிகள் நிறைவேறும் த.டை பட்டிருந்த செயல்கள் மீண்டும் தொடரும். இழுபறியாக இருந்த பணம் உங்களை வந்து சேரும்.

சிம்மம்

உங்கள் மனம் காட்டும் வழியில் செயல்படுவீர்கள் .நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும் .திட்டமிட்டு செயல்படுவதால் நன்மைகள் உண்டாகும் .நட்பு வட்டம் விரிவடையும் .அரசியல்வாதிகளின் ஆலோசனைக்கு மதிப்பு ஏற்படும். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள்.

கன்னி

குடும்பத்தில் தேவையை நிறைவேற்றுவீர்கள் . நீண்ட நாள் சேமித்த பணத்திற்கு செலவுகள் வர வாய்ப்புகள் உள்ளது .ஆதலால் வரவு செலவு நெருக்கடிகள் ஏற்படலாம். உங்கள் எதிர்பார்ப்பில் தடை உண்டாகும் .சிலருக்கு வீண் பிரச்சனைகள் தேடி வரும்.

துலாம்

உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். உறவினர்கள் உங்களது வீடு தேடி வருவர். செயல்களில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டு .உங்கள் உதவியை எதிர்பார்த்து சிலர் உங்களை சந்திப்பார்கள். லாபமான முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.

விருச்சிகம்

குடும்பத்தினர் ஒத்துழைப்புடன் உங்கள் செயலில் லாபம் அடைவீர்கள். உங்கள் முயற்சி வெற்றி அடையும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். நண்பர்களுடன் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும் .உங்களது முயற்சிகள் அணுகூலம் உண்டாகும். நட்பு வட்டம் விரிவடையும்.

தனுசு

மற்றவர் விமர்சனங்களை பொருட்படுத்தாமல் உங்கள் செயலில் வெற்றி காண்பீர்கள். கடந்த காலம் அனுபவத்தை கொண்டு உங்கள் முயற்சிகள் வெற்றி உண்டு. தந்தை வழி உறவுகளுடன் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். குடும்பத்தில் உங்களுக்கு மதிப்புகள் கூடும்.

மகரம்

வீண் சச்சரவுகள் உங்கள் தேடி வரும் .அரசியல்வாதிகளுக்கு நெருக்கடிகள் தோன்றும். உங்கள் எதிர்பார்ப்பு இன்று இழுபறியாகும். செயலில் சங்கடம் ஏற்படலாம். தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும் .மனதில் குழப்பம் ஏற்படும் .ஆதலால் கவனம் தேவை .

கும்பம்

செயல்களிகள் ஏற்பட்ட தடைகள் விலகும். உங்கள் முயற்சி ஆதாயத்தை உண்டாக்கும் .நண்பர்கள் ஒத்துழைப்புடன் உங்கள் முயற்சிகள் வெற்றி கரமாக அமையும். தம்பதிகளுக்குள் உண்டான பிரச்சனைகள் விலகும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும்.

மீனம்

குடும்பத்தில் இருந்து நெருக்கடி நீங்கும் .பணத்திற்காக நீங்கள் மேற்கொண்ட முயற்சி வெற்றிகரமாக அமையும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். மறைமுக எதிரிகள் விலகி செல்வார்கள். உங்கள் செயல்கள் மற்றவர்களை பாராட்டுவார், நீங்கள் எதிர்பார்த்த தகவல் உங்களை வந்து சேரும்.

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US