இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (26/04/2024)

Daily Rasi Palan Tamil
By Sakthi Raj Apr 26, 2024 04:09 AM GMT
Sakthi Raj

Sakthi Raj

Report

மேஷம் முதல் மீனம் வரையிலான இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் குறித்து தெரிந்து கொள்வோம்

மேஷம்

உங்கள் முயற்சியில் எதிர்பாராத நெருக்கடிகளை சந்திப்பீர்கள். அலைச்சல் அதிகரிக்கும்.வீண் பிரச்னைகள் உருவாக வாய்ப்பிருப்பதால் மற்றவர்களை அனுசரித்துச்செல்வது நன்மையாகும். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். தேவையற்ற சங்கடத்தையும் சிலர் அடைவீர்கள்.

ரிஷபம்

சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.உற்சாகத்துடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். உறவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். எதிர்பார்த்த வருவாய் வந்துசேரும்.

மிதுனம்

உடல் நிலையில் இருந்த பாதிப்பு விலகும். உற்சாகமுடன் செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். எதிரிகளால் தோன்றிய சங்கடங்களுக்கு தீர்வு காண்பீர்கள். தொழிலில் ஆதாயம் அதிகரிக்கும். உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்ப நலனில் அக்கறை கொள்வீர்கள்.

கடகம்

குழந்தைகள் குறித்த கவலை வந்து செல்லும். வியாபாரத்தில் மாற்றங்கள் செய்ய திட்டமிடுவீர்கள். பெரியவர்கள் ஆலோசனையை ஏற்று செயல்படுவீர்கள். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்கள். வெளியூர் பயணத்தில் ஆதாயம் காண்பீர்கள்.

சிம்மம்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும். திட்டமிட்டு செயல்பட்டு முயற்சியில் லாபம் காண்பீர்கள்.உங்கள் செயல்களை மற்றவர்கள் பாராட்டுவார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரம் சம்பந்தமாக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வருவாய் அதிகரிக்கும்.

கன்னி

தடைப்பட்டிருந்த முயற்சியில் அனுகூலமும் ஆதாயமும் உண்டாகும். நிதிநிலை உயரும்.குடும்பத்தில் உங்கள் ஆலோசனை ஏற்கப்படும். உறவினர்கள் உங்களைப் பாராட்டுவார்கள். வரவேண்டிய பணம் வந்துசேரும். சகோதரர்களுடன் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.

‘சூரைத் தேங்காய் உடைத்தல்’ பற்றி தெரியுமா?

‘சூரைத் தேங்காய் உடைத்தல்’ பற்றி தெரியுமா?


துலாம்

உங்கள் முயற்சிகளுக்கு தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வர்கள். வருமானம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். உங்கள் முயற்சிகள் லாபமாகும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தினர் உதவியுடன் தொழிலை விரிவு செய்வீர்கள்.

விருச்சிகம்

உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். அலைச்சல் உண்டானாலும் செயலில் லாபம் காண்பீர்கள். மனதில் குழப்பம் தோன்றும். தொழில் குறித்த ரகசியங்களை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம். தேவையற்ற நெருக்கடிகளுக்கு இன்று ஆளாவீர்கள். பொன் பொருள்களைக் கையாளுவதில் கவனம் தேவை.

தனுசு

வியாபாரத்தில் எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும். திடீர் செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.பூராடம்: குடும்பத்தினர் உங்கள் எண்ணத்திற்கு எதிராக செயல்படுவார்கள். புதிய பிரச்னைகள் உண்டாகலாம். திடீர் செலவுகள் ஏற்பட்டு சங்கடத்திற்கு ஆளாவீர்கள். நண்பர்கள் உதவியுடன் அதை சமாளீப்பீர்கள் .

மகரம்

நீங்கள் மேற்கொள்ளும் செயல் எளிதாக நிறைவேறும். எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும்.நண்பர்கள் உதவியுடன் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள். தொழிலில் இருந்த தடைகள் விலகும். உங்கள் நீண்டநாள் விருப்பம் நிறைவேறும்.

கும்பம்

நேற்றுவரை நிறைவேறாமல் இருந்த ஒரு முயற்சி இன்று நிறைவேறும். வரவு அதிகரிக்கும்.நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். உங்கள் முயற்சி ஒன்று ஆதாயத்தில் முடியும்.மனதில் இருந்த குழப்பம் நீங்கும். தொழிலில் ஏற்பட்ட மந்த நிலையை சரி செய்வீர்கள்.

 மீனம்

குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்துசேரும். சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்கள். நண்பர்களால் உங்கள் முயற்சி வெற்றியாகும். நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பாராத வரவு வந்து சேரும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5005
Direct
+91 96001 16444
Mobile
bakthi@ibctamil.com
Email US