இழந்த சொத்துக்களை மீட்க வேண்டுமா? குபேரன் வழிபட்ட இந்த ஆலயம் சென்று வாருங்கள்

By Sakthi Raj Jun 05, 2026 03:30 AM GMT
Report

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்தில் ஹரிகேசநல்லூர் என்கின்ற ஊரில் அமைந்துள்ளது ஸ்ரீ பெரிய நாயகி சமேத அரியநாதர் திருக்கோயில். இது சுமார் 16 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மற்றும் மிகவும் சக்தி வாய்ந்த கோவிலாக விளங்குகிறது.

ஒரு முறை குபேரனே இந்த தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபாடு செய்து சிவ பெருமானின் முழு அருளை பெற்றிருக்கிறார். அதைவிட முக்கியமாக இந்த ஆலயத்தில் சனிபகவானுடைய மனைவி தேவிக்கு சனி சன்னதி அமைந்திருக்கிறது. ஹரி கேசரி என்ற பாண்டிய மன்னன் இந்த ஆலயத்தை கட்டியதால் மன்னன் பெயரால் இந்த ஊர் ஹரிகேசநல்லூர் என்று அழைக்கப்படுகிறது.

அப்படியாக, இந்த ஆலயத்தில் முகப்பில் கோபுரம் எதுவும் இல்லை. ஆலயத்திற்குள் நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம், நந்தி அடுத்து மண்டபம் கடந்து உள்ளே சென்றால் சூரியன், சந்திரன், சப்த மாதர்கள், தட்சிணாமூர்த்தி, பைரவர் போன்ற அனைத்து பரிவார தேவதைகளுக்கும் சன்னிதிகள் உள்ளன.

இழந்த சொத்துக்களை மீட்க வேண்டுமா? குபேரன் வழிபட்ட இந்த ஆலயம் சென்று வாருங்கள் | Ariyanatha Swami Jestadevi Temple Harikesavanallur

கஜலட்சுமி யோகம்: குரு பகவானின் அருளால் யோகம் பெரும் 3 ராசிகள்

கஜலட்சுமி யோகம்: குரு பகவானின் அருளால் யோகம் பெரும் 3 ராசிகள்

அதோடு இந்த ஆலயத்தில் இருக்கக்கூடிய தர்ஷிணாமூர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தவராக இருக்கிறார். இங்கு தட்சணாமூர்த்தி இடது காலை வலது காலின் மீது மடித்து அமர்ந்தபடி நமக்கு காட்சியளிக்கிறார். பின்னிரு கரங்களில் மானும் மழுவும் ஏந்தியிருக்கிறார். அதோடு, இந்த ஆலயத்தில் குரு பெயர்ச்சி மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

இதையெல்லாம் விட இந்த கோவிலின் முக்கியமான சிறப்பு ராவணன் அவருடைய சகோதரன் குபேரனிடமிருந்து செல்வங்களை எல்லாம் பிடுங்கிக் கொண்டதோடு மட்டும் நிறுத்தாமல் அவனது புஷ்பக விமானத்தையும் அபகரித்து அவனை துரத்திவிட்டார். பிறகு குபேரன் ஹரிகேசநல்லூர் வந்து சிவபெருமானை விழுந்து வழிபட்டார்.

குபேரன் இந்த சிவனை பூஜித்து அவர் இழந்து செல்வங்களை எல்லாம் மீட்டு எடுத்ததால் தான் இந்த ஹரிகேசநல்லூர் சிவன் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. அதாவது, தன்னுடைய வாழ்க்கையில் நீண்ட நாட்கள் பொருளாதார நெருக்கடிகளில் இருப்பவர்கள் செல்வ வளம் வேண்டுபவர்கள் இங்கு வந்து குபேரன் பூஜை செய்த சிவபெருமானை வழிபாடு செய்யும்பொழுது அவர்களுக்கு செல்வ செழிப்பு கிடைக்கிறது.

இழந்த சொத்துக்களை மீட்க வேண்டுமா? குபேரன் வழிபட்ட இந்த ஆலயம் சென்று வாருங்கள் | Ariyanatha Swami Jestadevi Temple Harikesavanallur

ஜாதகம் பார்ப்பது போல் கனவு வந்தால் கட்டாயம் இது நடக்குமாம்

ஜாதகம் பார்ப்பது போல் கனவு வந்தால் கட்டாயம் இது நடக்குமாம்

வாழ்க்கையில் எல்லா நலன்களும் பெற்று அவர்கள் உயர்ந்த நிலைக்கு செல்கிறார்கள். இந்த கோவிலில் வெளி சுற்று பிரகாரத்தில் சனீஸ்வரரின் மனைவி ஜேஷ்டா தேவி தனது மைந்தன் மாந்தியை மடியில் வைத்துக் கொண்டு சன்னதி கொண்டிருக்கிறார்.

பொதுவாக, நாம் பிற ஆலயங்களில் ஜேஷ்டா தேவியின் சன்னதியை காண முடியாது. ஆனால், இக்கோவிலில் அவருடைய திரு உருவத்துடன் நமக்கு காட்சி கொடுப்பது தனி சிறப்பு ஆகும், ஆதலால் இந்த ஆலயம் சனீஸ்வரருக்கு உரிய பரிகார தலமாகவும் விளங்குகிறது.

இந்த ஆலயத்தில் குபேரனுக்கு தீபாவளி மற்றும் அட்சய திருதியை நாளில் மிக சிறப்பான வழிபாடுகள் நடைபெறுகிறது. இந்த நாட்களில் வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் வந்து வழிபாடு செய்கிறார்கள்.

இந்த ஆலயத்திற்கு நாம் ஒருமுறை சென்று வழிபட்டால் நாம் இழந்த செல்வங்களையும் இழந்த விஷயங்களையும் மீட்டெடுத்து வாழ்க்கையில் மீண்டும் மகிழ்ச்சியாக வாழலாம்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US