கணவன் மனைவி பந்தம் பலமாக நாம் வழிபட வேண்டிய திருத்தலம்
கணவன் மனைவி பந்தம் அத்தனை புனிதமானது, ஒரு விஷயம் புனிதமாக வேண்டும் என்றால் அது அத்தனை துயரங்களையும் அனுபவித்தாக வேண்டும் என்பதுதான் நியதி, அப்படித்தான் கணவன் மனைவி பந்தமும்.
ஆனால் சில நேரங்களில் அவர்களுக்கு இடையில் உள்ள பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே இருக்க அவர்கள் இருவரும் இரு சேர வணங்க வேண்டிய தெய்வம் மாதொருபாகனாய் வீற்றிருந்து அருளும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வர் ஆவார்.
இத்திருத்திலம் சேலத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது. இங்கு இறைவனின் திருப்பெயர் அர்த்தநாரீஸ்வரர் இறைவனின் திருப்பெயர் பாகம்பிரியாள்.
இத்திருத்தலத்தில் இறைவன் லிங்கத் திருமேனியில் இல்லை, நின்ற திருவுறுவினர் சந்நி மேற்கு நோக்கி அமைந்துள்ளது.
மூலவர் உருவ அமைப்பு பார்ப்பதற்கு அற்புதமான காட்சியாய் இருக்கும், ஒரு பாதி புடவை அலங்காரமும் ஒரு பாதி வேஷ்டி அலங்காரமும் செய்யப்பட்டிருக்கும்.
பெண்பாகத்தில் தலையில் ஜடை இருக்கும் முழு வடிவமும் வெள்ளை பாஷனத்தால் ஆனது. அர்த்தநாரீஸ்வரர் திருவடிவுக்கு கீழ் நீர் சுரக்கின்றது, இது தெய்வ தீர்த்தம் என பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் இத்தலத்தில் முருகப்பெருமான் சிறப்பு வாய்ந்தவராக அமைந்திருக்கிறார்.
சம்பந்தரால் பாடல் பெற்ற சிறப்பு வாய்ந்த திருத்தலமாக அமைந்திருக்கிறது.
மேலும் ,வீதியிலிருந்து பார்த்தால் இங்குள்ள மலை நாகம் போல் காட்சியளிக்கும்.அதனால் இத்தலத்திற்கு நாகசலம், தெய்வத்திருமலை ,நாகமலை என்ற பெயரும் உண்டு மலையின் மீது இக்கோயில் அமைந்து உள்ளதால் 1200 படிகள் ஏறி சுவாமியை தரிசனம் செய்ய வேண்டுயிருக்கும்
திருச்செங்கோடு இறைவன் ஆணும் பெண்ணும் இணைந்த அற்புத கோலமாக காட்சி அளிக்கிறார், அந்த காட்சியை பார்ப்பதே புண்ணியம் அளிக்கும்.
நாமும், நம் திருமண வாழ்வில் அர்த்தநாரீஸ்வரர் போல் கணவனும் மனைவியும் ஒரு சேர அன்பில் இணைந்து அற்புத வாழ்வு வாழ அனைவரும் ஒருமுறையாவது திருச்சங்கோடு அர்த்தநாரீஸ்வரரை வழிபட வேண்டும்
இங்கு சென்று இறைவனை வழிபட மனதில் உள்ள வேற்றுமையோ , குழப்பமோ சண்டையோ ஏற்படாது என நம்பிக்கை இருக்கிறது .கணவன் மனைவி இருவரும் சந்தோஷமாக நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ்க்கை நடத்திட திருச்செங்கோடு இறைவனை நாம் தரிசனை செய்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |