சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில், தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம், சென்னிமலை என்னும் ஊரில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் முருகனுக்கு அபிஷேகம் செய்தபின் தயிர் புளிப்பதில்லை என்ற அதிசயமும் நிகழ்கிறது.
இக்கோவிலில் திருப்புகழ் அருளிய ஸ்ரீ அருணகிரிநாதர் மற்றும் கந்த சஷ்டி கவசம் அருளிய ஸ்ரீ பால தேவராயர் சுவாமிகள் ஆகிய இருவருக்கும் தனித்தனி சன்னதி அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக, ரூ. 9 லட்சம் மதிப்பீட்டில் சன்னதி கட்டும் பணியை கடந்த ஆண்டு டிசம்பர் 20ஆம் திகதி தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.
இந்த கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று காலை அருளார்கள் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

இதையொட்டி யாக சாலை பூஜைகள் காலை 6 மணிக்கு தொடங்கியது, 7 மணிக்கு கலச புறப்பாடு அதை தொடர்ந்து கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.
இதனைத்தொடர்ந்து, இவ்விழாவில் கலந்துகொண்ட ஏராளமான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |