வாஸ்து: வீடுகளில் இரண்டு கடிகாரம் மேல் வைக்கக்கூடாதாம்.. ஏன் தெரியுமா?
வாஸ்து என்பது நம்முடைய நடைமுறை வாழ்க்கையை இன்னும் சிறப்பாக வாழ்வதற்கும் அமைத்துக் கொள்வதற்கு உதவக்கூடிய ஒரு அற்புதமான வழிகாட்டியாகும். அந்த வகையில் நம்முடைய வீடுகளை எல்லோரும் விதவிதமான பொருட்கள் கொண்டு அலங்கரிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த அலங்கார பொருட்களில் கட்டாயம் கடிகாரம் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது.
பலரும் ஒவ்வொரு அறைகளுக்கும் ஒவ்வொரு விதமான கடிகாரத்தை வாங்கி மாட்டி இருப்பார்கள். அந்த வகையில் வாஸ்து ரீதியாக நம்முடைய வீடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட கடிகாரங்களை வைக்கலாமா? நாம் வாஸ்து ரீதியாக கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.

நம்முடைய வீடுகளில் ஒவ்வொரு அறைக்கும் ஒரு கடிகாரம் என்று நமக்கு பிடித்தது போல் வைத்துக் கொள்ளலாம். ஆனால் எல்லா அறைகளிலும் கடிகாரத்தினுடைய நேரம் சரியாக ஒரே மாதிரியாக அமைந்திருக்க வேண்டும்.
வெவ்வேறு காலநிலைகள் கொண்டு ஒவ்வொரு அறைகளிலும் கடிகாரம் மாட்டி வைக்கும் பொழுது நமக்கு ஒரு விதமான மன அழுத்தத்தை அவை கொடுக்க கூடும் என்று சொல்லப்படுகிறது. அதைப்போல் வீடுகளில் எந்த ஒரு அறைகளிலும் ஓடாத கடிகாரத்தை நாம் வைத்திருக்க கூடாது. அதை உடனடியாக சரி பார்த்து மாட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

கடிகாரம் மாட்ட வேண்டிய சரியான திசை:
1. வடக்கு திசையில் கடிகாரம் மாட்டும் பொழுது நமக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரம் கொடுக்கிறது.
2. கிழக்கு திசையில் கடிகாரம் மாட்டும் பொழுது குழந்தைகளின் படிப்பும் வேலையும் சிறப்பாக அமையும்.
3. மேற்கு திசையில் மாட்டும் பொழுது வீட்டில் அமைதியான சூழ்நிலை உருவாகிறது.
4. தெற்கு திசையில் கடிகாரம் மாட்டுவதை மட்டும் நாம் தவிர்க்க வேண்டும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |