அசோகா அஷ்டமி(05-04-2025)பெண்கள் மறக்காமல் செய்யவேண்டிய வழிபாடு
பங்குனி மாதம் அமாவாசை திதி முடிந்த பிறகு, வரக்கூடிய எட்டாவது நாள் வளர்பிறை அஷ்டமி திதி. இன்றைய தினம் ராமன் சீதையை நினைத்து வழிபாடு செய்வதற்கான உகந்த தினம் ஆகும். அப்படியாக, ராமன் சீதைக்கும் இந்த அசோக அஷ்டமிக்கும் என்ன தொடர்பு.
இன்றைய நாள் ராமன் சீதை அருளை பெற நாம் என்ன செய்யவேண்டும்? என்று பார்ப்போம். அகிலம் காக்கும் இறைவன் கிருஷ்ண பரமாத்மா அவதரித்த தினம் தான் அஷ்டமி. அவரின் அவதாரமான ராமர் அவதரித்த தினம் நவமி.
இருந்தாலும் இந்த அஷ்டமியில் ராமரை வழிபாடு செய்ய சில காரணங்கள் இருக்கிறது. அனைவரும் போற்ற கூடிய காவியம் ராமாயணம். இந்த இராமாயணத்தில் சீதா தேவியை இராவணன் கடத்திச் சென்று இலங்கையில் சிறை வைத்தது, அசோகவனத்தில் தான். அசோக வனம் என்றால் மருதாணி செடி நிறைந்த வனம் என்று அர்த்தம்.
அம்மா, சீதாதேவி அவர்கள் அசோகவனத்தில் கணவனைப் பிரிந்து, வாடி துன்புறும் பொழுது இந்த மருதாணி செடிதான் தான் இலைகளையும் பூக்களையும் சீதா தேவியின் மேல் உதிர செய்து, ஆவர் துயர் துடைத்து உடன் நின்று அவர்களுக்கு ஆறுதல் சொன்னதாக புராணங்கள் சொல்கிறது.
பிறகு, ராமர், ராவணனோடு போர் புரிந்து சீதையை மீட்ட பிறகு, சீதாதேவி தனக்கு ஆறுதல் சொன்ன இந்த அசோக செடிகளுக்கு, அதாவது மருதாணி செடியை பார்த்து தங்களுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேளுங்கள் என்று கேட்டு இருக்கிறார் சீதா தேவி.
அதற்கு, அந்த மருதாணி இலைகள், அம்மா தாங்கள் இந்த அசோகவனத்தில் அனுபவித்த துன்பத்தை போல் வேறு எந்த பெண்ணும் அவர்கள் இனிமேல் அனுபவிக்க கூடாது என்று மருதாணி இலைகள் கேட்டு இருக்கிறார்கள்.
அதற்கு சீதா தேவி, யார் இந்த மருதாணி இலைகளை பறித்து தங்களுடைய கைகளில் வைத்துக் கொள்கிறார்களோ, அவர்களுக்கு தீர்க்க சுமங்கலி வரம் பெறுவார்கள்.
அந்த பெண்களுக்கு மனதில் மகிழ்ச்சியும், கணவன் மனைவி இடையே நல்ல அன்யோன்யம் உருவாகும் என்று வரம் கொடுத்திருக்கிறார். அதனால் தான் வடமாநிலங்களில் திருமணத்திற்கு முன்பு மெஹந்தி விழா நடத்துகிறார்கள்.
மேலும், அவர்கள் வீட்டில் என்ன விஷேசம் என்றாலும் கைகளில் மறக்காமல் மருதாணி வைத்து கொள்கிறார்கள். ஆண்கள் மட்டும் அல்லாமல் பெண்களும் கைகளில் மருதாணி வைத்துக்கொள்கிறார்கள். மருதாணி சந்தோஷத்தின் அடையாளமாக பார்க்க படுகிறது.
அப்படியாக, இந்த சம்பவம் நடந்தநாளும், சீதாதேவி மருதாணி செடிக்கு இந்த வரத்தை கொடுத்த நாளும் தான் பங்குனி மாத வளர்பிறை அஷ்டமி திதி. சோகம் என்றால், கவலை கஷ்டம் துன்பம் என்று அர்த்தம். அசோகம் என்றால் துன்பம் இல்லாத வாழ்க்கை என்று அர்த்தம்.
இன்றைய தினம் எவர் ஒருவர் சீதா தேவியை மனதில் நினைத்து கைகளில் மருதாணி வைத்து கொள்கிறார்களோ அவர்களுக்கு, சீதா தேவியின் அருளால் மனதில் மகிழ்ச்சியும், சந்திக்கும் இன்னல்களும் முற்றிலுமாக விலகும்.
அது மட்டும் அல்லாமல், கணவனை விட்டு ஆயுள் முழுவதும் பிரியாமல் வாழக்கூடிய பாக்கியம் கிடைக்கும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேருவார்கள். திருமணம் ஆகாத பெண்கள் கையில் மருதாணியை வைத்து கொள்ள ஸ்ரீ ராமரை போல் நல்ல கணவர் அமைவார்கள்.
அதோடு, இவ்வளவு சிறப்பான நாளில் மருதாணியை பெண்களுக்கு தானம் கொடுக்கலாம். மருதாணி செடியை வீட்டில் நட்டு வளர்க்கலாம். இவ்வாறு செய்வது இன்னும் சிறந்த பலனை கொடுக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |