இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?(10.06.2024)

Report

மேஷம்

மேஷ ராசி நேயர்களுக்கு வெளியூர் பயணத்தால் ஆதாயம் உண்டாகும்.இருந்தாலும் செயல்களில் கவனமாக செயல்படுவதால் லாபம் உண்டாகும்.வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.எடுக்கும் முயற்சிகளில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள்.

ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களுக்கு இன்று வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த வரவு தள்ளிப்போகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படலாம். நினைத்ததை துணிச்சலாக செயல்படுத்தி காட்டுவீர்கள்.

மிதுனம்

மிதுன ராசி நேயர்களுக்கு இன்று நீங்கள் எதிர்பார்த்த பணம் வந்து சேரும். வியாபாரம் நல்ல வரவை இட்டு தரும். குடும்பத்தில் இருப்பவர்களுடைய விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த முயற்சியை செயல் படுத்தி சாதிப்பீர்கள்.

கடகம்

கடக ராசி நேயர்களுக்கு இன்று வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகி வரவு அதிகரிக்கும் மனதில் குழப்பம் ஏற்பட்டாலும் முயற்சிகளில் தடை இல்லாமல் சிந்தித்து செயல்படுவதால் அந்த சிரமத்தை குறைப்பீர்கள்.

சிம்மம்

சிம்ம ராசி நேயர்களுக்கு இன்று குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்களும் பிரச்சினைகளும் ஏற்படலாம். புதிய திட்டங்களும் முயற்சிகளோ, இன்று செய்வதை தவிர்த்து விடுவது நன்மை உண்டாக்கும்.

சனிக்கிழமை மாலையில் கற்பூரம் மற்றும் கிராம்பு எரிப்பதால் ஏற்படும் நன்மைகள்

சனிக்கிழமை மாலையில் கற்பூரம் மற்றும் கிராம்பு எரிப்பதால் ஏற்படும் நன்மைகள்


கன்னி

கன்னி ராசி நேயர்களுக்கு இன்று செயல்களில் குழப்பம் ஏற்படலாம். இழுபறியாக இருந்த பல பிரச்சனைகளும் முடிவுக்கு வரும். மன குழப்பத்தில் இருந்து விடுபடுவீர்கள்.

துலாம்

துலாம் ராசி நேயர்களுக்கு நீண்ட நாள் மனதில் இருந்த குழப்பம் விலகி சந்தோஷம் நிலவும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தேவையில்லாததை சிந்தித்து செயல்படுவதால் மனதில் இருந்த சங்கடங்கள் விலகி விவேகத்துடன் செயல்படுவீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களுக்கு இன்று இனம் புரியாத குழப்பங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். உடல் சோர்வு மன சோர்வு உண்டாகும். பூர்வீகசொத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும்.

தனுசு

தனுசு ராசி நேயர்களுக்கு இன்று அவர்கள் மனதில் இருந்த குழப்பங்கள் விலகும். செய்யும் முயற்சிகள் நிதானம் அவசியம் யோசித்து செயல்படுவதால் சங்கடமில்லாமல் நிம்மதியாக இருக்கலாம். உங்கள் செயல்களில் முழு கவனம் செலுத்துவது நன்மையை உண்டாக்கும்.

மகரம்

மகர ராசி நேயர்களுக்கு இன்று வரவு அதிகரிக்கும். நண்பர்கள் ஒத்துழைப்பால் முயற்சிகள் வெற்றியாகும். நினைத்ததை நடத்தி காட்டுவீர்கள். பெரியவர்கள் ஆலோசனை கேட்டு நடப்பது நன்மையைத் தரும்.

கும்பம்

கும்ப ராசி நேயர்களுக்கு இன்று மனதில் இருந்த குழப்பம் விலகி உற்சாகம் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகி நினைத்ததை முடிப்பீர்கள். செயல் வெற்றியாகும் குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.

மீனம்

மீன ராசி நேயர்களுக்கு இன்று அலுவலகத்தில் திடீரென பிரச்சனைகளை சந்திப்பீர்கள். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பூர்விக சொத்தில் இருந்த பிரச்சனை முடிவுக்கு வரும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US