செவ்வாயுடன் இந்த கிரகம் இணைந்து இருந்தால் தொழிலில் ஜாக்பாட் அடிப்பார்களாம்
ஜோதிட ரீதியாக நாம் நம்மைப் பற்றியும் எதிர்கால கணிப்புகளை பற்றியும் தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில், நம்முடைய ஜாதகத்தில் செவ்வாய் எந்த கிரகங்களோடு இணைந்து இருக்கிறார்? அந்த கிரக இணைவுகள் நம்முடைய தொழில் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் உருவாக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.
செவ்வாய் - கேது சேர்க்கை:
ஜோதிட சாஸ்திர ரீதியாக செவ்வாயும் கேதுவும் எதிர்மறை இணைவு என்று கருதப்பட்டாலும் இந்த சேர்க்கை ஒருவருக்கு வெளியூர் அல்லது வெளிநாட்டுக்கு சென்று வேலை பார்த்து வெற்றிகளை பெறக்கூடிய வாய்ப்புகளையும் ஆன்மீகத்தில் முன்னேற்றமும் புகழையும் பெற்றுக் கொடுக்கும்.
செவ்வாய் - சனி சேர்க்கை:
இந்த சேர்க்கை பூர்வீகத்தை விட்டு வேறு ஒரு இடத்திற்கு சென்று தொழில் செய்து அங்கு மிகப்பெரிய அளவில் வெற்றியையும் ஜாக்பாட் அடிக்கக்கூடிய யோகத்தையும் பெற்றுக் கொடுக்கும். மேலும், இது கர்ம வினைகளையும் குடும்பப் பின்னணியையும் குறிக்கக் கூடியதாகும்.

செவ்வாய் - சூரியன் சேர்க்கை:
இந்த சேர்க்கை வேலை செய்யும் இடங்களில் அங்கீகாரம் கிடைப்பதில் சிக்கல், உயர் அதிகாரிகளிடம் மோதல், அடிக்கடி கல்வி அல்லது வேலையை மாற்றக்கூடிய அமைப்பை உண்டாக்கும். ஒரு சிலருக்கு உடல் நல குறைபாடுகளை உண்டு செய்யும்.
பரிகாரங்கள்:
இந்த சேர்க்கை கொண்டவர்களுக்கு சில நேரங்களில் கடன் விபத்து போன்ற பிரச்சனை வரலாம். ஆதலால், ரத்த தானம் செய்வது சிறந்தது.
மேலும், இவர்கள் செவ்வாய் கிழமையில் முருகப்பெருமானை வழிபாடு செய்வதும் கடல் ஆறு அல்லது மலை சார்ந்த முருகன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வதும் சிறப்பான பலன் கொடுக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |