விஜய், ரமேஷ், முருகன் பெயர் கொண்டவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்?

By Sakthi Raj Jun 27, 2026 01:45 AM GMT
Report

  ஜோதிடத்தில் எண் கணிதம் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. எண் கணிதம் கொண்டும் நாம் பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும். அதே போல் ஒருவருடைய பெயரை வைத்தும் நாம் அவர்களுடைய வாழ்க்கை முறையை கணிக்கலாம்.

அந்த வகையில், விஜய் என்ற பெயர் ஒருவருக்கு இருக்கிறது என்றால் அவர் புதன் செவ்வாய் மற்றும் குரு சுக்கிரன் சேர்களை கொண்டவராக இருக்கிறார். இது குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் சில குழப்பங்களை உண்டாக்கும்.

எதிலும் சரியான மற்றும் உறுதியான முடிவு எடுக்காமல் குழப்பத்தை உண்டு செய்யும். அதோடு இவர்கள் ஒரு வேலையை தொடங்குகிறார்கள் என்றால் அதை முழுமையாக முடிக்காமல் பாதையில் விட்டு விடுகின்ற பழக்கம் கொண்டவர்கள்.

அதேபோல், ஒரு சிலருக்கு குலதெய்வங்களின் பெயரை வைப்பார்கள். கருப்பசாமி, பழனி, முருகன் போன்ற பெயர் உண்டு. அவர்கள் அந்தந்த கிரக தாக்குதலின் காரணமாக நரம்பு மண்டலம், முதுகு தண்டுவடம் அல்லது முதுகு தொடர்பான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள்.

இந்த ராசியில் பிறந்தவர்கள் ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை கொண்டிருப்பார்களாம்..

இந்த ராசியில் பிறந்தவர்கள் ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை கொண்டிருப்பார்களாம்..

அதேபோல், ரமேஷ் என்ற பெயரை வைத்து இருப்பவர்களுக்கு புதனின் ஆதிக்கம் இருப்பதால் இவர்கள் வியாபாரம் அல்லது தொழில் துறைகளில் சிறந்த விளங்க கூடியவர்களாக இருக்கிறார்கள். குடும்பத்தில் உள்ள பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் தொடர்பான மன அழுத்தங்கள் அவ்வப்போது சந்திக்க நேரும்.

அதேபோல், சந்தோஷ், ஆனந்த் ஆகிய பெயர்கள் சூரியனின் ஆதிக்கம் பெற்றவர்கள். இவர்கள் மிகுந்த ஆளுமை மிக்கவர்களாகவும் அரசு துறையில் இருப்பவர்களாகவும் இருந்தாலும் தாய் வழியாக இவர்களுடைய ஆசை நிறைவேறாமல் போவதுண்டு.

தாயால் இவர்களுக்கு சில போராட்டங்கள் சந்திப்பதற்கான வாய்ப்புகளும் உண்டு. மேலும், ஒவ்வொருவருடைய பெயரும் அவர்களுடைய ஜாதகத்தில் இருக்கக்கூடிய கிரகங்களின் வெளிப்பாடாகவே கருதப்படுகிறது.

அவர்களுடைய பெயருக்கும் ஜாதகத்திற்கும் உள்ள கிரகங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்று சொல்கிறார்கள். மேலும், பெயருக்கு பின்னல் இருக்கும் காரணம் பற்றி இந்த காணொளியைப் பார்த்து தெரிந்துகொள்ளவோம்.  

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US