180 கோவில்களில் ஒரே நாளில் 1200 திருமணம் உறவினர்கள் குவிந்ததால் திணறிய பக்தர்கள்

Report

ஆடி முடிந்து ஆவணி மாதம் பிறந்தவுடன் திருமண நிகழ்வுகள் கலைகட்ட துவக்கியது. அந்த வகையில், ஆகஸ்ட் 23ஆம் தேதி முகூர்த்த நாள் வந்தது.

இதனை அடுத்து தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் வழக்கத்தை விடவும் அதிக எண்ணிக்கையில் திருமணங்கள் நடைபெற்றன. இதனால் கோவில்களில் மணமக்கள் அவர்களுடைய பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியவர்கள் குவிந்ததால் கோவில்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

வடபழனி முருகன்:

சென்னை வடபழனி முருகன் ஆலயத்தில் காலை துவக்கத்தில் முதல் மணமக்களின் வருகையும் திருமண சடங்குகளும் நடைபெற்றது. மேலும், மணமக்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டபங்களில் திருமணம் முடிந்தவுடன் மூலவர் தரிசனமும் செய்தனர். இதனால், கோவில் வளாகம் முழுவதும் மணமக்களின் பெற்றோர் உறவினர்கள் நண்பர்கள் என கூட்டம் நிரம்பி காணப்பட்டது.

180 கோவில்களில் ஒரே நாளில் 1200 திருமணம் உறவினர்கள் குவிந்ததால் திணறிய பக்தர்கள் | Aug 23 2026 1800 Wedding In Single Day

12 லக்னம் அடிப்படையில் எந்த தசா புத்தி மிகப்பெரிய ராஜயோகத்தை கொடுக்கும்?

12 லக்னம் அடிப்படையில் எந்த தசா புத்தி மிகப்பெரிய ராஜயோகத்தை கொடுக்கும்?

திருத்தணி திருப்பரங்குன்றம்:

முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக திகழக்கூடிய திருத்தணி முருகன் ஆலயத்தில் 30 திருமணங்கள் நடைபெற்றது.

அதேபோல், முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் நேற்று 101 திருமணங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் 50 திருமணங்களும் பழனி கோவிலில் 64 ஜோடிகளுக்கும் திருமணம் நடைபெற்றது.

1200 திருமணங்கள்:

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் தமிழகத்தில் உள்ள 11 மண்டலங்களுக்கு உட்பட்ட 180 முக்கிய கோவில்களிலும் நேற்றைய தினம் சுமார் 1200 திருமணங்கள் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது.

இதன் வழியாக ரூபாய் 13 லட்சத்து 98 ஆயிரத்து 527 வருவாயாக பெறப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

180 கோவில்களில் ஒரே நாளில் 1200 திருமணம் உறவினர்கள் குவிந்ததால் திணறிய பக்தர்கள் | Aug 23 2026 1800 Wedding In Single Day

எப்பேர்பட்ட கஷ்டங்களையும் போக்கும் ஏகாதசி மந்திரம்

எப்பேர்பட்ட கஷ்டங்களையும் போக்கும் ஏகாதசி மந்திரம்

குருவாயூர் கோவிலில்:

நேற்றைய தினம் கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் ஆவணி மாதத்தில் அதிக ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அதாவது கடந்த 8.9 2024 ஆம் தேதி 333 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. அதேபோல், ஆவணி மாதம் முகூர்த்த நாளான நேற்றைய தினம் 437 தொகுதிகளுக்கு திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US