இன்றைய ராசி பலன்(01-08-2025)
மேஷம்:
இன்று ஒரு சிலருக்கு தேவை இல்லாத தொந்தரவுகள் வர வாய்ப்புகள் உள்ளது. உடல் நிலையில் அக்கறை செலுத்த வேண்டும். அலுவலகத்தில் ஏற்பட்ட பணி சுமை குறையும். உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும்.
ரிஷபம்:
நீண்ட நாட்களாக சந்தித்த பிரச்சனைகள் விலகும். குடும்ப உறுப்பினர் உங்களை புரிந்து நடந்துக் கொள்வார்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நன்மையான நாள்.
மிதுனம்:
அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். இறைவழிபாடு மிக சிறந்த நன்மை அளிக்கும். வேலையில் உங்களுக்கு எதிராக சிலர் செயல்பட வாய்ப்புகள் உள்ளது.
கடகம்:
நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். தொழிலில் சந்தித்த சிக்கல்கள் விலகி செல்லும். பொருளாதாரம் முன்னேற்றம் மிக சிறப்பாக அமையும். கணவன் மனைவி சண்டை விலகும்.
சிம்மம்:
தாய் உடல் நிலையில் அக்கறை செலுத்த வேண்டும். குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். ஆன்மீகத்தில் மனதை செலுத்துவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபத்தை பெறுவீர்கள்.
கன்னி:
இன்று உங்கள் வேலை சுமை அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் மீது அக்கறை செலுத்த வேண்டும். பெண் தெய்வ வழிபாடு மேற்கொள்வதால் நன்மை உண்டாகும். மகிழ்ச்சியான நாள்.
துலாம்:
இன்று நீண்ட நாட்களாக எதிர்பார்த்த விஷயம் ஒன்று நல்ல முடிவைப் பெற்று தரும். உங்கள் வீட்டிற்கு விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். குலதெய்வ வழிபாடு நன்மை அளிக்கும்.
விருச்சிகம்:
உங்கள் செயலில் லாபம் ஏற்படும். முயற்சி நிறைவேறும். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். வழக்கமான செயல்களில் லாபம் காண்பீர். தொழிலில் இருந்த தடை விலகும்.
தனுசு:
உங்கள் சொந்த வாழ்க்கையை பற்றி யாரிடமும் பகிர்ந்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். உங்கள் கனவு நினைவாகும் நாள்.
மகரம்:
விஐபிகள் ஆதரவால் விருப்பம் நிறைவேறும். தந்தைவழி உறவுகளால் லாபம் காண்பீர். பணப்புழக்கம் அதிகரிக்கும். மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கும்பம்:
வெளியூர் பயணத்தில் தடை தோன்றும். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். புதிய முயற்சி இன்று மதியம் வரை வேண்டாம். அடுத்தவர் விவகாரங்களில் தள்ளியிருப்பது நல்லது.
மீனம்:
குடும்பத்தில் உண்டான நீண்ட நாள் பிரச்சனை நல்ல முடிவிற்கு வரும். எதிர்பாராத நற்செய்தி தேடி வரும். புதிய தொழில் தொடங்குவது பற்றி ஆலோசனை செய்வீர்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







