2025 ஆவணி மாதத்தில் அமோகமாக வாழப்போகும் 4 ராசிகள்
ஜோதிடத்தில் நவக்கிரகங்களில் ஆளுமையான கிரகமாக சூரிய பகவான் இருக்கிறார். சூரிய பகவான் ஒவ்வொரு தமிழ் மாதம் பிறப்பின் பொழுதும் அவர் தன்னுடைய இடத்தை மாற்றுகிறார். அந்த வகையில் வருகின்ற ஆகஸ்ட் 17ஆம் தேதி அன்று ஆவணி மாதம் பிறக்கின்றது. ஆவணி மாதத்தில் சூரிய பகவான் சிம்ம ராசிக்கு பயணம் செய்ய உள்ளார்.
சிம்ம ராசி சூரிய பகவான் உடைய சொந்த ராசியாகும். தனது சொந்த ராசியில் சூரிய பகவான் சஞ்சாரம் செய்யும் இந்த கிரக மாற்றம் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்க உள்ளது. மேலும் சூரிய பகவானுடைய ஆதிக்கத்தை ஆவணி மாதம் முழுவதும் பார்க்கலாம். இந்த மாற்றத்தால் சில ராசிகளுக்கு வாழ்க்கையில் எதிர்பாராத நன்மைகள் காத்திருக்கிறது. அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.
மிதுனம்
சூரிய பகவானுடைய இந்த மாற்றம் மிதுன ராசிக்காரர்களுக்கு மன தெளிவை கொடுக்க உள்ளது. இவர்கள் இந்த காலகட்டத்தில் தன்னுடைய பேச்சாற்றலை முழுமையாக பயன்படுத்தி அவர்களுக்கான அங்கீகாரத்தை பெற்றுக் கொள்வார்கள். இந்த காலகட்டத்தில் ஒரு சிலருக்கு தொழில் ரீதியாக சில ஒப்பந்தங்கள் செய்யும் நிலை உருவாகலாம். குடும்ப வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகளை தெளிவான சிந்தனைகள் கொண்டு அணுகுவார்கள். அதனால் மகிழ்ச்சி உண்டாகும்.
சிம்மம்
சிம்ம ராசியினருக்கு இந்த மாதம் முழுவதும் ஒரு மிகச்சிறந்த மாதமாக அமையப்போகிறது. தொட்ட காரியங்கள் அனைத்திலும் அவர்களுக்கு சாதகமான நிலையும் அதில் வெற்றியும் பெறப் போகிறார்கள். காதல் வாழ்க்கை மிக அருமையாக வளரும் காலம். எதிர்காலம் பற்றிய கவலைகள் விலகும். சிலருக்கு திருமணங்கள் கைகூடும். தொழிலில் முதலீடுகள் செய்வது பற்றி யோசனை செய்வீர்கள். வாழ்க்கை பற்றிய பயம் விலகும்.
துலாம்
துலாம் ராசியினருக்கு இந்த மாற்றமானது இவர்கள் வாழ்க்கையில் இவர்களுக்கான அங்கீகாரத்தை தேடி கொடுக்க உள்ளது. படிப்பில் சிறந்து விளங்கும் நிலை உருவாகும். அலுவலகத்தில் உங்களுக்கான பெயர் கிடைக்கும். தந்தையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். விலகி சென்ற சொந்தங்கள் மீண்டும் இணங்கி வந்து பேசுவார்கள. திருமண வாழ்க்கைக்காக வரன் தேடுபவர்களுக்கு நல்ல வாழ்க்கை துணை அமையும்.
தனுசு
தனுசு ராசியினருக்கு வாழ்க்கையைப் பற்றிய புரிதலும் வாழ்க்கையை நன்றாக வாழ வேண்டும் என்ற ஆசையும் பிறக்கும் காலகட்டமாகும். சுயமாக சிந்தித்து முடிவுகளை எடுப்பார்கள். இவர்கள் எடுக்கும் முடிவுக்கு குடும்பத்தின் துணையும் இருக்கும். நினைத்த வேலையை நினைத்த நேரத்தில் சாதிக்கும் திறன் இவர்களுக்கு இந்த மாதத்தில் பிறக்கப் போகிறது. உயர் கல்விக்கான ஏற்பாடுகள் இவர்களுக்கு சாதகமாக அமையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







