கோடி பலன்கள் கிடைக்கும் ஆவணி அமாவாசை.., சிறப்புகள் என்ன?

By Yashini Sep 01, 2024 07:50 AM GMT
Report

இந்து பண்டிகையில் அமாவாசை நாள் முக்கிய நாளாக கருதப்படுகிறது.

இந்நாளில் தானம் செய்வதற்கும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கும் உகந்த நாளாக கருதப்படுகிறது.

ஆவணி மாதம் அமாவாசை, சிம்ம ராசியில் சூரியன் மற்றும் சந்திரன் ஒன்றாக சஞ்சரிக்கும் போது ஏற்படுகிறது.

கோடி பலன்கள் கிடைக்கும் ஆவணி அமாவாசை.., சிறப்புகள் என்ன? | Avani Amavasai 2024

அந்தவகையில், இந்த மாதம் அமாவாசை திங்கட்கிழமை அன்று வருவதால், சோமாவதி அமாவாசை என்றும் அழைப்பர். 

ஆவணி மாதம் சோமாவதி அமாவசை திதி திங்கட்கிழமை, செப்டம்பர் 2ஆம் திகதி அன்று வருகிறது.

திங்கட்கிழமை 2 செப்டம்பர் 2024, காலை 05:21 மணிக்கு தொடங்கி 3 செப்டம்பர் 2024, காலை 07:24 மணிக்கு செவ்வாய்க்கிழமை முடிகிறது.

கோடி பலன்கள் கிடைக்கும் ஆவணி அமாவாசை.., சிறப்புகள் என்ன? | Avani Amavasai 2024

இந்த ஆண்டு 2024 ஆவணி மாத அமாவாசை, சிவனுக்கு உகந்த நாள், சிவனுக்கு உகந்த திங்கட்கிழமையில் என்பதால் மிகச் சிறப்பானது. 

ஆவணி அமாவாசை, அதிகாலை 5 மணிக்கே தொடங்கி விடுவதால், நண்பகல் நேரத்துக்குள் அமாவாசை திதி கொடுப்பதோ தர்ப்பணம் செய்வதோ செய்து விடலாம்.

அமாவாசை முடிந்த பிறகு, அவரவர் வசதிக்கு ஏற்ப, தானம் செய்யலாம். அமாவாசை தானம் பல மடங்கு புண்ணியம் தரும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US