ஆவணி திருவிழா: பச்சை சாத்தி பவனி வந்த திருச்செந்தூர் முருகன்

By Yashini Sep 01, 2024 09:45 AM GMT
Report

முருகனின் அறுபடை வீடுகளில் மிகவும் சிறப்புப் பெற்ற தலமாக திருச்செந்தூர் விளங்குகிறது.

இக்கோவிலில் நடைபெறும் தைப்பூசம், வைகாசி விசாகம், ஆவணித் திருவிழா போன்ற நிகழ்வுகள் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இந்த தினங்களில் லட்சக்கணக்கான மக்கள் திருச்செந்தூருக்குத் தரிசனம் செய்ய வருகை தருவார்கள்.

ஆவணி திருவிழா: பச்சை சாத்தி பவனி வந்த திருச்செந்தூர் முருகன் | Avani Festival In Tiruchendur Swamy Temple

அந்தவகையில் இந்த ஆண்டு ஆவணித் திருவிழா ஆகஸ்ட் 24ஆம் திகதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது.

12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் 8ஆம் நாளான நேற்று காலை சண்முகப் பெருமாள் பச்சை சாத்தி சப்பரத்தில் ஊர்வலம் வந்தார்.

ஆவணி திருவிழா: பச்சை சாத்தி பவனி வந்த திருச்செந்தூர் முருகன் | Avani Festival In Tiruchendur Swamy Temple

இதற்கு முன்பாக சுவாமிக்குச் சிறப்புப் பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.       

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.  


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US